கத்தியை காட்டி ரயில் பயணிகளை மிரட்டிய ரூட் தல குட்டி! மறுவாழ்வு மையத்தில் சேவையாற்ற ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: ரூட் தல எனக் கூறி சக மாணவர்களுடன் புறநகர் ரயில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டிய மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மறுவாழ்வு மையத்தில் சேவை செய்யுமாறு நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த குட்டி என்ற மாணவன், ரூட் தல எனக் கூறிக் கொண்டு சக மாணவர்களுடன், புறநகர் ரயிலில் வருபவர்களிடம் கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக குட்டி என்ற மாணவன் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

மாணவனின் தந்தை
அப்போது நீதிபதி மாணவனின் தந்தையை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில்
அவர் ஒரு சிறிய ஹோட்டலில் காசாளராகப் பணியாற்றி தனது மகனை சிரமத்துடன் படிக்க வைப்பதாக தெரிவித்தார்.

உடல் ஊனமுற்ற குழந்தைகள் மையம்
இதையடுத்து, நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆறு வாரங்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னையில் உள்ள உடல் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான மித்ரா மறுவாழ்வு மையத்திற்குச் சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு, பராமரிப்பதில் உதவ வேண்டும் என்ற நிபந்தனையோடு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

நிவாரணம்
ஒவ்வொரு வாரமும் அதற்கான அறிக்கையை விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்கவும் மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மாணவனுக்கு மனிதாபிமானத்தின் அர்த்தத்தையும் உணர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிபந்தனை விதிப்பதாக தெரிவித்துள்ளார். மாணவனின் கல்வி கெட்டு விடக் கூடாது என்பதற்காகவே இந்த நிவாரணம் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட் தல என்ற பெயரில் பேருந்துகளிலும் ரயில்களிலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுததும் வகையில் கத்தியை காட்டி மிரட்டுவது, பட்டா கத்தியை ஃபுட் போர்டு அடித்தபடியே தரையில் தேய்த்து செல்வது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இதில் இரு அணிகளாக செயல்படுவதால் அவர்களுக்குள் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு கைகலப்பு நடப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications