Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்டதால் பம்பரம் சின்னத்தை இழந்த மதிமுக! ஹைகோர்ட்டில் நடந்த வாதம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்டதால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Chennai HC says that MDMK lost its recognition in 2010 itself

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்திரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என்றும் மதிமுக-வின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பம்பரம் சின்னம் பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலும் இல்லை என நேற்று தெரிவித்தார்.

எனவே மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையர் தான் முடிவெடுப்பார் எனவும் கூறினார். தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி மதிமுக மனு அளித்துள்ளதாகவும் அந்த மனு மீது புதன்கிழமை காலை ஒன்பது மணிக்குள் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மதிமுக வழக்கறிஞர்களுக்கு இமெயில் மூலம் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல், பம்பரம் ஒதுக்கீட்டு சின்னமாகவும் இல்லை, பொது சின்னமாகவும் இல்லை.

ஏற்கெனவே மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்திருப்பதால் அதை பொது சின்னமாக அறிவித்து மதிமுகவுக்கு வழங்குவதில் தேர்தல் ஆணையத்திற்கு எந்த தடையும் இல்லை. தேர்தல் ஆணையம் எங்களுக்கு பாசிட்டிவான ஒரு பதிலை தர வேண்டும் என எதிர்பார்த்த நிலையில் எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வரும் 30ஆம் தேதிதான் சின்னம் ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இரு தொகுதிகளில் போட்டியிடவில்லை என்பதால் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. நாங்கள் வேறொரு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கிறோம்.

எனவே தேர்தல் ஆணையம் எங்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என வாதம் செய்தார். அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், ஒரே மாநிலத்தில் இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் ஒதுக்கீட்டு சின்னம் ஒதுக்க முடியும். தற்போது பம்பரம் ஒதுக்கீட்டு சின்னமாக இருக்கிறது. அது பொது சின்னமாக அறிவிக்கப்டவில்லை. பொது சின்னமாக அறிவிக்கப்படவில்லை. பொது சின்னமாக அறிவிக்காதபட்சத்தில் மனுதாரர் கோருவது போல் ஒதுக்கீடு செய்து தர முடியாது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஒரே தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பொதுப் பட்டியலில் இல்லாத பம்பரம் சின்னத்தை ஒதுக்க சட்டவிதிகள் இல்லை. ஒரே மாநிலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியும். கடந்த 2010 ஆம் ஆண்டு மதிமுக தனது அங்கீகாரத்தை இழந்துவிட்டது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கில் தீர்வு காண இயலாது என கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+