"தாமரை பூவுக்கும் பாஜகவுக்கும் என்னிக்கும்.." சின்னம் ஒதுக்கியதே தப்பு.. ஹைகோர்ட்டில் அதிரடி மனு
சென்னை: பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கப்பட்ட தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான T.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது ஆகும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தனது மனு மீது நடவடிக்கை எடுக்காத இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல் இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே தனது மனுவை பரிசீலித்து, பாஜக-வுக்கு வழங்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லஷ்மி நாராயணன் அமர்வில் முறையிடப்பட்டது. ஆனால் முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications