தேனி காதல் ஜோடி கொலை வழக்கு.. தூக்கு தண்டனையை உறுதி செய்தது ஹைகோர்ட்!
சென்னை: தேனி சுருளி நீர்வீழ்ச்சி உள்ள வனப்பகுதியில் காதல் ஜோடி கொலை வழக்கில் தொடர்புடைய திவாகருக்கு தேனி அமர்வு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்தவர் தங்கநிதி. இவரது மகன் எழில் முதல்வன் (23). இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் முத்துத்தேவன் பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில், இருவரும் கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து கஸ்தூரியின் தந்தை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

சடலம்
இந்த நிலையில் நிர்வாண நிலையில் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் சுருளி அருவிப் பகுதியில் காட்டுப் பகுதியில் சடலமாக கிடந்தவர்கள் எழில் முதல்வன், கஸ்தூரி ஆகியோர் என்பது தெரிய வந்தது.

கஸ்தூரியை அழைத்த கும்பல்
விசாரணையில் இருவரும் சுருளி அருவிக்கு சென்றுவிட்டு அங்குள்ள காட்டு பகுதியில் பேசி கொண்டிருந்தபோது ஒரு மர்மக் கும்பல் அங்கு வந்து கஸ்தூரியை உல்லாசமாக இருக்க அழைத்தது. இதை எழில் முதல்வன் தட்டிக் கேட்டதால் அவரை கொலை செய்தது.

7 ஆண்டுகள்
பின்னர் கஸ்தூரியை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

ஆயுள் தண்டனை
இந்நிலையில் இந்த வழக்கில் தேனி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செந்தில் குமரேசன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளி திவாகருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி , தூக்கு தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

மேல்முறையீடு செய்த திவாகர்
இதை எதிர்த்து திவாகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தேனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications