“சாவி” தமிழக அரசு கையில்! ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கைபடி விசாரிக்க உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைபடி மாநில அரசே விசாரிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க முடியும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் அதை ஆமோதிக்கும் வகையில், "சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்" எனப்பேசினார்.

கடந்த 2017 மார்ச் 17 ஆம் தேதி ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணைகோரி தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம். துணை முதலமைச்சரான பின்னர் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க சம்மதித்த அவர், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
3 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுடன் உருவாக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், பல முறை கால நீட்டிப்பு பெற்றுக்கொண்டே இருந்தது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையம் 8 முறை சம்மன் அனுப்பியும் பல்வேறு காரணங்களை கூறி விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் விசாரணைக்கு ஆஜராகி பல்வேறு விளக்கங்களை அளித்தார்.

5 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ஆறுமுகசாமி ஆணையம் முழு விசாரணையையும் நிறைவு செய்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை சமர்பித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியபோது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் அந்த அறிக்கையின்படி எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையே ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைபடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக தமிழ்நாடு அரசே முடிவெடுக்க முடியும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
-
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications