“நான் தான் அப்பா என நிரூபிச்சா.. குழந்தையை கவனிக்கும் பொறுப்பை ஏற்க தயார்” - மாதம்பட்டி ரங்கராஜ்
சென்னை: தன் மீதான அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். "மகளிர் ஆணையம் உத்தரவிட்டும், மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை இல்லை" என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசல்டா தரப்பு வாதம் வைத்தது.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார். டி.என்.ஏ. சோதனையில் கிரிசில்டாவின் குழந்தையின் தந்தை நான் என தெரியவந்தால் பொறுப்பேற்க தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா அவர் மீது புகார் அளித்திருந்தார். புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் இருந்து வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் இருக்கும் நிலையில், அவர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் தான் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமண புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, தனிப்பட்ட வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையரகத்திலும் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வருகிறார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதுதான் என்றும், இதனை நிரூபிக்க டி.என்.ஏ பரிசோதனைக்கும் தயார் என்றும் தெரிவித்து இருந்தார் ஜாய் கிரிசில்டா.
இந்நிலையில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ஜாய் கிரிசில்டாவுக்குத் தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக் கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி என். செந்தில்குமார் விசாரித்தார்.
விசாரணையின்போது ஜாய் கிரிசில்டா தரப்பு வழக்கறிஞர் பிரபாகரன் வாதிடுகையில், "தனது மனைவியைப் விவாகரத்து செய்துவிட்டுத் திருமணம் செய்வதாகக் கூறி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார். சமூகத்தில் செல்வாக்கு உள்ள ரங்கராஜ் மீதான புகார் குறித்து, ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் முறையாக விசாரிக்காமல், நிறை மாத கர்ப்பிணியான கிரிசில்டாவை 8 மணி நேரம் காவல் நிலையத்தில் உட்கார வைத்து அலைக்கழித்தனர். மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வாதிடுகையில் ஜாய் கிரிசில்டாவுக்குப் பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பரிசோதனையில் தந்தை எனத் தெரியவந்தால் வாழ்நாள் முழுவதும் குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்க மாதம்பட்டி ரங்கராஜ் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், நற்பெயரைக் கெடுக்கும் வகையில் யூடியூப் சேனல்கள் மோசமான வீடியோக்களைப் பரப்பி பணமாக்கி வருகின்றன என்றும், அத்தகைய வீடியோக்களை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்த நிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது. தனக்கு எதிராக அவதூறு பரப்ப ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications