வாடகை ஒப்பந்தம் முடிந்தும் அடாவடி.. ஒரே நாள் தான் டைம்.. டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அதிரடி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்னரும் காலி செய்யாமல் எத்தனை டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன என்ற விவரங்களுடன் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அறிக்கையுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடையை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீது போலியான வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக புகார் சென்ற நிலையில் இந்த உத்தரவு டாஸ்மாக் நிர்வாகத்தை அதிரவைத்துள்ளது.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களாக மீண்டும் வலுவடைந்து வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக மது ஒழிப்பு மாநாட்டை நடத்தியுள்ளது. இருப்பினும் சட்டவிரோத டாஸ்மாக் பார், மனமகிழ் மன்றங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் நெட்வொர்க் ஆகியவை வலுவடைந்து கொண்டே செல்கிறது.
ஒருபக்கம் அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூடி வருகிறோம் என்று சொன்னாலும், மறுபக்கம் மது விற்பனைக்கு ஆட்சியாளர்கள் துணை போவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கான ஒப்பந்தம் முடிந்ததை சுட்டிக்காட்டிய உரிமையாளருக்கு நடந்த சம்பவத்தால் நீதிமன்றமே அதிர்ச்சியடைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பி.சுந்தர்.
இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், " நான் கிருஷ்ணகிரியில் சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். எங்கள் ஊரில் எனக்கு சொந்தமான 220 சதுர அடி கொண்ட கடையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் செயல்படுகிறது. மாதம் ரூ.7,500 வாடகை வீதம் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வாடகை ஒப்பந்த காலம் முடிவந்து விட்டதால், கடையை காலி செய்து தரும்படி கேட்டேன். இதுகுறித்து பல முறை டாஸ்மாக் மேலாளருக்கு கடிதம் கொடுத்தேன். மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தேன். எந்தப் பயனும் இல்லை. நான் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம்தேதி சூளகிரி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் நான் நடத்தி வந்த பேக்கரி கடைக்கு என்னை தேடி வந்துள்ளார்.
நான் இல்லாததால், கடை ஊழியர்களை காவல்துறையினர் அடித்து உதைத்தனர். பின்னர் என்னிடம் இருந்து 5 குவாட்டர் மதுபாட்டில்கள், 10 காலி மதுபாட்டில்கள், 20 பிளாஸ்டிக் டம்ளர்கள் இருந்ததாகவும், நான் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்ததாகவும் கூறி என் மீது வழக்கு பதிவு செய்தனர். டாஸ்மாக் மேலாளர் தூண்டுதலின்பேரில், அவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் சூளகிரி காவல்துறை என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்." என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "கடையை காலி செய்ய சொன்னதற்காக இப்படி ஒரு பொய் வழக்கு கடை உரிமையாளர் மீது போடப்பட்டுள்ளது." என்று மனுதரார் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, "தமிழ்நாடு முழுவதும் வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்னரும் எத்தனை கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் காலி செய்யாமல் தொடர்ந்து மதுக்கடைகளை நடத்தி வருகிறது? என்பது குறித்த விவர அறிக்கையுடன் வரும் திங்கட்கிழமை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும்." என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
-
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications