நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தேவை... அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்படும் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாகவும் இந்த கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நீர்நிலையை பழைய நிலைக்கு கொண்டு வர கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி பேராசிரியர்கள் இரண்டு பேர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது.

Chennai high court order, Report on measures taken to protect water bodies is required

உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஐ.ஐ.டி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன், சவுமேந்திரர் ஆகியோர் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் காவல்நிலையம் கட்டப்பட்ட இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்ததுபோது, ஐஐடி போரசிரியர் அறிக்கையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இருப்பதாகவும் இதே போன்று தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களின் அடிப்படையில் செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர் நிலை எனவும் 1987 ஆம் ஆண்டு வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடம் மேய்க்கால் புறம்போக்கு எனும் இருப்பதாகவும் தெரிவித்த நீதிபதிகள், கால்வாய்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது நீர் தேங்கும் பகுதிகளை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் அதனை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு இரண்டு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+