தவறான சிகிச்சை.. இஎஸ்ஐ மருத்துவமனையிடம் ரூ.1.5 கோடி இழப்பீடு கோரிய பெண்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: தவறான சிகிச்சை காரணமாக இயல்பு வாழ்க்கையை இழந்ததால் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட பெண் வங்கி ஊழியர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, கே.கே. நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை, மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் வங்கியின் துணை நிறுவனத்தில் பணியாற்றிய கஸ்தூரி பிரியா என்பவர், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்து, இயல்பு வாழ்க்கை வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனால், தனக்கு அளித்த சிகிச்சை குறித்து நிபுணர் குழுவை நியமித்து விசாரிக்க கோரியும், தனக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் கஸ்தூரி பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தவறான சிகிச்சை வழங்கியதுடன், தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்களை இ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகம் தரவில்லை என்றும், இதன் காரணமாக பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இ.எஸ்.ஐ. கழகம், அசோக் நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், இந்திய மருத்துவ ஆணையம் ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications