ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாதா? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் பரபர நோட்டீஸ்!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்த திருமகன் ஈவேரா மரணமடைந்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகளின்படி திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட பி.விஜயகுமாரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரச்சாரம் செய்ததில் பல்வேறு விதிமீறல்கள் நடந்தன என அவர் குற்றம்சாட்டினார்.
ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுத்தனர். மேலும் தேர்தல் ஆணையம் விதித்துள்ள வரம்பை மீறி அதிக பணத்தை பிரச்சாரத்திற்காக செலவழித்துள்ளனர். எனவே, ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இது தொடர்பாக தேர்தல் ஆணையம், ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications