ஸ்டாலின் வழக்கு.. தீர்ப்புக்கு முன்பாக அட்வகேட் ஜெனரல் சொன்ன விஷயம்.. முடிவையே மாற்றிய நீதிபதிகள்!
சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு சென்ற விவகாரத்தில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் 2017 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு சென்ற அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மீது உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த நோட்டீஸை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக சட்டசபை செயலாளர் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இந்த நோட்டீஸ் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தற்போதைய சட்டசபை தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்பதால் அதனை அவருடைய முடிவுக்கே விட்டுவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சட்டசபை மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே ஒன்றோடு ஒன்று தலையீடு செய்யக்கூடாது. உரிமை மீறல் நோட்டீஸ் மீது இறுதி முடிவெடுக்கப்படாத நிலையில், அதில் தலையிட விரும்பவி்ல்லை. அவ்வாறு தலையீடு செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
மேலும் அது மிகவும் ஆபத்தானது. இதுதொடர்பாக புதிதாக அமைந்துள்ள சட்டசபை முடிவுக்கே விட்டுவிடலாம் என கருத்து தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் தீர்ப்பை அளிக்க தயாரானபோது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜராகி, இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள 18 எம்.எல்.ஏக்களில், நான்கு பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மீதமுள்ள 14 பேருக்கு இதுவரை நோட்டீஸ் அனுப்பவில்லை.
எனவே இந்த வழக்கில் தற்போது நீங்கள் தீர்ப்பளித்தால், இவர்கள் மேல்முறையீடு செல்லும்போது எங்களுடைய கருத்தை கேட்காமலேயே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது என்று ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். எனவே அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்ட பின்னர் தான் தீர்ப்பு அளிக்க வேண்டும் எனக் கோரினார்.
இதையடுத்து, ஆவணங்களை எடுத்துப் பார்த்த நீதிபதிகள், முதல்வர் ஸ்டாலின் தரப்பில் கூட தங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை என கூறப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பாததற்கு காரணம் அவர் அவெய்லபிளாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றனர்.
இதைத்தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் நோட்டீஸ் அனுப்பாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "4 பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நோட்டீஸ் அனுப்ப தவறிவிட்டனர்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நோட்டீஸ் வரவில்லை என கூறியதால் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அப்போதைய திமுக எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் எலக்ட்ரானிக் முறையிலோ அல்லது நேரிலோ நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications