கோயம்பேட்டில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கலாம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் முனையம் கட்டப்பட்டு இருந்தாலும் கூட சென்னை கோயம்பேட்டை சுற்றிய ஆம்னி பஸ் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். மறு உத்தரவு வரும்வரை இந்த நடைமுறையை பின்பற்றலாம் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும், புதிதாக துவங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Chennai High Court orders Omni buses to pick and drop passengers at Koyambedu in

இதற்கு ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த இடவசதி இல்லை. இதனால் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க அனுமதி வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில் தான் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க போடப்பட்ட உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்களும், ஆம்னி பேருந்து சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகள், நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசுத்தரப்பில், சென்னை நகரில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் வழித்தடங்களின் இரு வரைபடங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம். கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதற்கு கட்டப்பட்டது என்ற கேள்வி எழும் என்றும், ஜி எஸ் டி சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கரில் பரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என உறுதி தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதாகக் நீதிபதி கூறினார்.

அதன்படி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது சென்னை கோயம்பேட்டை சுற்றிய ஆம்னி பஸ் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதுதவிர போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளையும் ஏற்றலாம் எனவும், கிளாம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென்மாவட்ட ஆம்னி பஸ்களை இயக்க கூடாது என்றும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும்வரை கோயம்பேடு ஆம்னி பஸ்களின் பணிமனைகளை பயன்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+