"அரசே இப்படி செய்யலாமா! பாலை பிளாஸ்டிக்கில் விற்பது ஏன்?" சென்னை ஐகோர்ட் கூறிய முக்கிய கருத்து
சென்னை: பிளாஸ்டிக் தடை உத்தரவு குறித்து தொடரப்பட்ட வழக்கில் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்பது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளாட்டிக் தடை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உறுபதியாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது,

தமிழக அரசு வழக்கறிஞர்
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் ,பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதாகக் கடைகள் சீல் வைக்கப்பட்டது குறித்த அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உணவுப் பொருட்கள், தீன்பண்டல், விளையாட்டு பொம்மைகள், துணிமணிகள் பிளாஸ்டிக் பைகளில் புகுத்தி விற்கப்படுவதாகக் கூறினார்.

ரேஷன் கடைகள்
மேலும் மஞ்சள் பை திட்டம் கொண்டு வந்தாலும், ரேஷன் கடைகளில் பொருட்கள் பிளாஸ்டிக்கில் வைத்து விற்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குத் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை எடுத்து வருவதைத் தடுக்காத வரையில் அவற்றைப் பறிமுதல் செய்வதால் பெரிய அளவில் பலன் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடும் அதிருப்தி
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சில்லறை வியாபார கடைகளை மூடும் நிலையில் அரசு பிளாஸ்டிக்கில் பொருட்களை விற்பனை செய்யலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை பிளாஸ்டிகில் அடைத்து மஞ்சள் பையில் வழங்குவதால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்தார்,

பால் விற்பனையில் பிளாஸ்டிக்
மேலும், அரசு நடத்தும் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் பின்னர் எப்படி தடையை அமல்படுத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பாலை ஏன் முன்பு போலப் பாட்டிலில் விற்கக்கூடாது என்றும் பால் பொருட்களுக்குத் தான் பெருமளவிற்கு பிளாஸ்டிக் பக்கெடுக்கள் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் வரும் ஜூன் 13ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications