"டிஜிட்டல் சொத்து.." கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளீர்களா? சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவு
சென்னை: இந்தியாவில் கிரிப்டோ சார்ந்த முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இருப்பினும், இதற்குத் தெளிவான ரூல்ஸ் இல்லாததால் பலரும் சட்ட ரீதியான சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். இதற்கிடையே கிரிப்டோ தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கிரிப்டோ கரன்சிக்களை டிஜிட்டல் சொத்தாகக் கருதலாம் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இளைஞர்கள் மிகவும் ஆர்வம் காட்டும் ஒன்றாக கிரிப்டோ இருக்கிறது. இளைஞர்கள் பலரும் கிரிப்டோவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பினும், இந்தியாவில் இன்னுமே கிரிப்டோ சார்ந்து தெளிவான விதிமுறைகள் இல்லை. இதனால் இளைஞர்கள் பல நேரங்களில் குழம்பிப் போகிறார்கள்.

கிரிப்டோ முதலீடு
அதுபோன்ற நேரங்களில் வேகமாக வளரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில், குறிப்பாக கிரிப்டோ துறையில் அதன் உரிமைகள், பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் நீதிமன்றங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அப்படித் தான் சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கிரிப்டோகரன்சி குறித்து முக்கியமான தீர்ப்பை அளித்திருந்தது. அதாவது கிரிப்டோகரன்சியை சொத்தாக சென்னை ஐகோர்ட் அங்கீகரித்துள்ள நிலையில், இது ஒரு சட்டப் பாதுகாப்பை வழங்கியுள்ளது..
டிஜிட்டல் சொத்து
சென்னை உயர் நீதிமன்றம் கிரிப்டோகரன்சியை இந்தியச் சட்டத்தின் கீழ் "சொத்து" என்று அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் டிஜிட்டல் சொத்துக்களுக்கு ஓரளவுக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். இது இந்தியக் கிரிப்டோ சந்தைக்கு ஒரு முக்கியமான தீர்ப்பாகவே இருக்கிறது.
நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் சனிக்கிழமை இது தொடர்பான தீர்ப்பை அளித்தார். அதில் ரிப்பிள் போன்ற கிரிப்டோகரன்சிகள் வழக்கமான physical சொத்துக்களோ அல்லது சட்டப்பூர்வமான பணமோ அல்ல என்றாலும், அவை ஒரு சொத்தின் அனைத்து முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டார். அவர் மேலும், "இது ஒரு வழக்கமான சொத்து அல்லது கரன்சி கிடையாது. இருப்பினும், இது ஒருவர் சேர்த்து வைத்திருக்கக்கூடிய ஒரு சொத்து.. நம்பிக்கை அடிப்படையில் வைத்திருக்கக்கூடியது" என்று விளக்கினார். இது கிரிப்டோகரன்சிகளின் தன்மையைத் தெளிவாக விளக்குகிறது.
பின்னணி
கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பிரபல இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் ஆன WazirX என்ற நிறுவனத்தில் பெரிய சைபர் தாக்குதல் நடைபெற்றது. எதிரியம் மற்றும் ERC-20 டோக்கன்களை குறிவைத்து அந்த ஹேக்கிங் தாக்குதல் நடந்துள்ளது. அதில் $230 மில்லியன் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த எக்ஸ்சேஞ்ச் முழுமையாக முடக்கப்பட்டன. அந்த சைபர் தாக்குதலுக்குப் பிறகு தனது ₹1.98 லட்சம் மதிப்புள்ள 3,532.30 XRP டோக்கன்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் அவர், தன்னிடம் இருந்த XRP என்பது திருடப்பட்ட டோக்கன்களிலிருந்து வேறுபட்டவை என்றும் Section 9 of the Arbitration and Conciliation Act, 1996 கீழ் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சைபர் தாக்குதலால் ஏற்பட்ட நஷ்டத்தை அனைத்து முதலீட்டாளர்களும் பகிரும் வகையில் அந்த நிறுவனம் மறுபகிர்வு திட்டத்தை அறிவித்திருந்தது.
சிங்கப்பூர் நீதிமன்றம்
அதாவது தனது எக்ஸ்சேஞ்சில் அனைவரும் அந்த நஷ்டத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். திருடப்பட்ட எதிரியம் வைத்திருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அந்த நஷ்டத்தைப் பகிர வேண்டும். இருப்பினும், திருடப்பட்ட கிரிப்டோவுக்கும் தனது சேமிப்பிற்கும் தொடர்பில்லை என்பதால் அந்தத் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.
சிங்கப்பூர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்தே இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை எடுத்ததாக WazirX நிறுவனம் வாதிட்டது. இருப்பினும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்க மறுத்துவிட்டது. வழக்கு தொடர்ந்த நபரின் சொத்து சைபர் தாக்குதலுக்கு உள்ளானவை அல்ல என்பதையும் சென்னை ஐகோர்ட் சுட்டிக்காட்டியது. அதில் மேலும், "சைபர் தாக்குதலுக்கு உள்ளானவை ERC 20 நாணயங்கள்.. ஆனால், மனுதாரர் வைத்திருந்த கிரிப்டோகரன்சி வேறானவை" என்று தெளிவுபடுத்தியது.
முக்கிய உத்தரவு
கடந்த 2021ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டிய நீதிபதி, "நமது நாட்டிற்குள் உள்ள சொத்துக்களைப் பாதுகாக்கும் உரிமை இந்திய நீதிமன்றங்களுக்கு இருக்கிறது.. விண்ணப்பதாரர் பரிவர்த்தனை சென்னையில் இருந்து செய்துள்ளார். இந்தியாவை சேர்ந்த வங்கி மூலமாகவே செய்துள்ளார் என்பதால் இது சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் தான் வரும்" என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வருமான வரிச் சட்டம், பிரிவு 2(47A)ஐ மேற்கோள் காட்டிய நீதிபதி, கிரிப்டோகரன்சிகளை "விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்கள்" என்று தெரிவித்தார்.. இது இந்தியாவில் கிரிப்டோ சொத்துகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications