இலங்கை அகதி முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை கோரி வழக்கு! மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவு
சென்னை: அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் வசித்த ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59,500 பேர் முகாம்களில் உள்ளனர். முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்ககோரி அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், 2022 ம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு பொதுப்படையாக உள்ளதாகவும், முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் குடியுரிமை பெறாததால் பாதிக்கப்பட்டதாக விண்ணப்பித்தால், அதை குடியுரிமை சட்டத்திற்குட்டு பரிசீலித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
முன்னதாக கடந்த 11ம் தேதி முதல் இந்தியாவில் சிஏஏ எனும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு இந்த குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் கூட இப்போது தான் அமலுக்கு வந்தது. அதன்படி இந்தியாவின் அண்டை நாடுகளாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சி, கிறிஸ்தவர்கள் மதசிறுபான்மையினர்களாக உள்ளனர்.
இவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்து 6 ஆண்டுகள் வசிக்கும் பட்சத்தில் விண்ணப்பம் செய்து இந்திய குடியுரிமையை பெற முடியும். அதோடு 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த குடியுரிமை திருத்த சட்டம் இடமளிக்கிறது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியா வரும் முஸ்லிம்களுக்கு இந்த குடியுரிமை திருத்த சட்டம் எதிரானதாக உள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. மேலும் இலங்கையில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் தமிழகம் வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இது இடமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அதோடு தமிழகத்தில் சிஏஏ எனும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை கோரிய வழக்கில் சிஏஏவுக்கு உட்பட்டு குடியுரிமை வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications