அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கு.. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 26ம் தேதி தீர்ப்பு
சென்னை: வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அந்த வழக்கை தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். இந்த வழக்கில் வரும் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.
திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவர் ஐ பெரியசாமி. இவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான குற்றச்சாட்டில் அதிமுக ஆட்சியில் ஐ பெரியசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 2012ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணை தொடங்கியது: இந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. இதற்கிடையே தான் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஐ பெரியசாமி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கடந்த மார்ச் மாதம் விடுவித்தது.
இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஐ பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை கையில் எடுத்தார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை தொடங்கினார். இந்தவழக்கில் இறுதி விசாரணை கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது.
தீர்ப்பு எப்படி இருக்கும்?: அமைச்சர் ஐ பெரியசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமன் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு தீர்ப்புக்காக வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐ பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கில் வரும் திங்கட் கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படுகிறது. ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற பரபரப்பு ஆளும் கட்சி வட்டாரத்தில் தற்போதே கிளம்பியுள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications