ஆபத்தில் சென்னை.. எச்சரிக்கும் அண்ணா பல்கலைக்கழக ஆய்வு! தப்பிக்கவே முடியாதாம்!
சென்னை: கடல் நீர் மட்டம் உயர்வு குறித்து தொடர்ந்து எச்சரிக்கைகள் வந்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் வெளி வந்துள்ள முடிவுகள், சென்னை கடல் நீர் மட்டம் உயர்வால் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றன.
சமீபத்தில் 'Theoretical and Applied Climatology' இதழில் வெளியான இந்த ஆய்வில், அரபிக்கடலை விட வங்காள விரிகுடா பகுதியில் கடல் மட்டம் வேகமாக உயர்வது சுட்டி காட்டப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலோர மாவட்டங்கள் அபாயகரமான நிலையில் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தியிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ஏ. ராமச்சந்திரன் தலைமையிலான இந்த ஆய்வு, 1992 முதல் 2023 வரையிலான அலை அளவிகள் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை பகுப்பாய்வு செய்தது. மேலும், 39 உலகளாவிய காலநிலை மாதிரிகளின் CMIP6 தரவுகளை உள்ளடக்கிய SimCLIM AR6 மாதிரிகளை ஆய்வுகளுககு பயன்படுத்தியது.
காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்யும் பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புவி மண்டலத்தின் பல்வேறு அம்சங்களைக் கணிக்க கணினி மாதிரிகளை உருவாக்குகின்றனர். இந்த மாதிரிகள் காற்றில் உள்ள கார்பன் அளவு, வெப்பநிலையின் உயர்வு, கடல் மட்ட உயர்வு, மற்றும் மழைப்பொழிவு மாற்றம் போன்ற தகவல்களைக் கணக்கிடப் பயன்படுகின்றன. இந்த மாதிரிகளின் தரவுகளைச் சேகரித்து, ஒருங்கிணைத்து, அவற்றை ஒப்பிடுவதைத்தான் CMIP6 என்று சொல்கிறார்கள்.
இப்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் கடல் மட்ட உயர்வு 25.72 - 110.2 சென்டிமீட்டர் வரை இருக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வின்படி, தூத்துக்குடியில் ஆண்டுக்கு 0.17 மி.மீ. அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
கடல் நீர் மட்டம் உயர்வு மட்டுமே இதில் பிரச்சனை கிடையாது. மாறாக, கடல் நீர் உட்புகுதலும், கடலோர அரிப்பும் தொடர்கின்றன. தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரை, இம்மாநிலத்தை குறிப்பாக பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது. நமது மாநிலத்தின் கடற்கரை எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதற்கு 2004 சுனாமிதான் சாட்சி. இப்படி இருக்கையில் கடல் மட்டம் உயருவதும், காலநிலை மாறுபாடுகளும் நமது கடற்கரையை பலவீனப்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்நிலைகளில் கடல் நீர் உட்புகுவது அதிகரித்து வரும் பிரச்சனையாகவும், குடிநீர் மற்றும் விவசாய உற்பத்தித்திறனுக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. பல இடங்களில் கடலோர அரிப்பும் காணப்படுவதால், மீன்பிடி மற்றும் விவசாய சமூகங்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் அதிகரிக்கின்றன.
1991 முதல் 2023 வரையிலான புயல் பதிவுகள் வங்காள விரிகுடா கடற்கரையின் பாதிப்பை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இக்காலகட்டத்தில் வங்காள விரிகுடாவில் 62 புயல் அமைப்புகள் பதிவாகியுள்ளன. இது அரபிக்கடலில் பதிவான 9 புயல்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம். இவற்றில், 67.3% கடுமையான புயல்கள் பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்டன. எனவே காலநிலை மாற்றம் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications