வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை.. போக்குவரத்து போலீஸுக்கு போன பார் அசோசியேஷன்
சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்கள் பற்றிய குறிப்பை திரும்பப் பெற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை போக்குவரத்து போலீசாரை வலியுறுத்தியுள்ளது.
சொந்த வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின் 198-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் வழக்கறிஞர்கள் பற்றிய குறிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் அறிவழகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக, வழக்கறிஞர்களுக்காக அவர்களின் பதிவு எண்ணுடன் கூடிய வழக்கறிஞர்களுக்கான ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றன. நடைபாதைகளில் விற்கப்படும் வழக்கறிஞர்கள் ஸ்டிக்கரை வாங்கி சிலர் தவறாக பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், போக்குவரத்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவு, குறைபாடான நம்பர் பிளேட் சம்பந்தமானது எனவும், அது ஸ்டிக்கர்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதனால், சரியான சட்டப் பிரிவை குறிப்பிடும்படியும், வழக்கறிஞர்கள் பற்றி, அறிவிப்பில் சுட்டிக் காட்டியுள்ள குறிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications