ரூ 24.50 கோடி மோசடி! பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ்வின் ஜாமீன் மனு தள்ளுபடி! ஹைகோர்ட் அதிரடி
சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனரும் பாஜக கூட்டணி கட்சி தலைவருமான தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் இரண்டுமுறை தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக் கொண்டபோது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சி. முனியப்பராஜ் ஆஜராகி, புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணை 4000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இருவரையும் ஜாமீனில் விடுவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி, பொது மக்களின் பணம் 600 கோடி ரூபாய் தொடர்புடைய மோசடி இது என்றும், தேவநாதன் இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் ஆவதற்கு முன்பு நிதிநிலைமை சீராக இருந்தது ஆனால் அவர் இயக்குனர் ஆன பின்பு மோசமாகிவிட்டதாக தெரிவித்தார்.
பொருளாதார குற்றங்களை தீவிரமாக கருத வேண்டும் என கேட்டுக் கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு கேட்ட நீதிபதி தேவநாதன் மற்றும் இயக்குனர் குணசீலன் ஆகியோர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications