ரூ 40 லட்சம் மோசடி வழக்கு!நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்படத்திற்காக தயாரிப்பாளரிடம் பெற்ற 40 கோடி ரூபாயை திருப்பி கொடுக்காத வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மீஞ்சூரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் சரவணன். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தை எடுப்பதற்காக ரூ 50 லட்சத்தை முன்பணமாக நடிகர் ராஜ்கிரணுக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

rajkiran chennai

ஆனால் அந்த படத்தின் பணிகள் தற்போது வரை தொடங்கப்படாமல் இருக்கின்றனவாம். இதனால் பணம் கொடுத்த சரவணன், ராஜ்கிரணிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் ராஜ்கிரணோ வாங்கிய பணத்தை கொடுக்கவில்லையாம்.

இது குறித்து பலமுறை ராஜ்கிரணை, சரவணன் அணுகியும் பணத்தை தராமல் இழுத்தடித்தாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் சரவணன் புகார் கொடுத்தாராம். அவர்கள் ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ 10 லட்சத்தை பெற்றுக் கொடுத்தனர்.

மீதமுள்ள ரூ 40 லட்சத்தை தருவதாக கூறிய ராஜ்கிரண் கொடுக்காமல் மோசடி செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த சரவணன், ஈஞ்சம்பாக்கம் காவல் நிலையத்தில் ராஜ்கிரண் மீது புகார் கொடுத்தார். மேலும் பொன்னேரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

பொன்னேரி நீதிமன்ற உத்தரவின் பேரில் ராஜ்கிரண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ராஜ்கிரண் தரப்பில் தன் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: படத் தயாரிப்பு தொடர்பாக 2022 ஆம் ஆண்டு நடந்த ஒப்பந்தத்தில் 4 ஆண்டுகள் கழித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமையியல் வழக்கான இந்த வழக்கில் குற்றவியல் சாயம் பூசப்படுகிறது.

தமிழக ரசிகர்களுக்கு நான் மிகவும் பரீட்சயமானவர். நான் எங்கேயும் தப்பி ஓடிவிட மாட்டேன். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். என தெரிவித்திருந்தார். இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வருகிறது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி ஹைகோர்ட் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 15 நாட்கள் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜ்கிரணின் இயற்பெயர் மொஹிதீன் அப்துல் காதர் என்பதாகும். அவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். அவருக்கு தமிழக அரசின் மாநில விருதுகள் 4 முறை கிடைத்துள்ளன. பிலிம்பேர் விருது ஒரு முறை கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+