இன்னும் 10 நாள்தான் டைம்! செந்தில் பாலாஜி சிறையிலேயே சிகிச்சையை தொடரலாம்.. 2-ஆவது நீதிபதி அதிரடி
சென்னை: சிறையில் இருந்தபடியே சிகிச்சையை தொடரலாமே என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக தீர்ப்பளித்துள்ளார்.
அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை கடந்த மாதம் 14 ஆம் தேதி தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெ. நிஷா பானு மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் கடந்த 27 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார்.
அவர் தனது வாதத்தில் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் அதை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இதன் மூலம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், நாடாளுமன்றம் இயற்றிய சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரி அதிகாரம் அமலாக்கத் துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என்பதால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை எனவும் குறிப்பிட்டார்.
அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவலில் வைக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தோ, ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ வழக்கு தொடரவில்லை. ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.
செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத் துறை காவலில் இல்லை என்பதால் அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில், ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என சட்டத்தில் உள்ளது. செந்தில் பாலாஜி கைதை பொறுத்தவரை சட்ட விதிகளின் படிதான் மேற்கொள்ளபட்டுள்ளது.
எந்த விதி மீறலும் இல்லை எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, எழுத்து பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய இரு தரப்பிற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை கடந்த 27 ஆம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த நீதிபதி நிஷா பானு, முதலில் தீர்ப்பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பில், சட்டவிரோத காவலில் இருப்பதாக மேகலாவின் மனு விசாரணக்கு உகந்தது. கைது சட்ட விதிகளின் படி இல்லை எனவே ஆட்கொணர்வு மனு ஏற்கப்படுகிறது. செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக தீர்ப்பளித்த நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி பின்னர் தனது தீர்ப்பை வாசித்தார். அதில் நீதிபதி நிஷா பானு தீர்ப்பை தாம் ஏற்கவில்லை எனவே அதில் தான் மாறுபடுவதாகவும் கூறி தனது தீர்ப்பை வாசித்தார். மனுதரார் கணவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற காவலில் அடைத்து பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றி நடைபெற்றுள்ளது. எனவே மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
நீதிமன்ற காவலிலேயே காவிரி மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். உடல்நிலை சரியாகும் வரையிலோ அல்லது இன்றிலிருந்து 10 நாட்களுக்கோ காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வரை சிகிச்சை தொடரலாம். அதன் பின்னர் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் தீர்ப்பளித்த நீதிபதி இந்த வழக்கில் நான்கு சட்ட கேள்விகள் எழுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications