சில்மிஷத்தால் சிக்கிய சிவசங்கர் பாபா.. கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்! மாணவியை ஆஜர்படுத்த ஆர்டர்
சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது மின்னஞ்சலில் புகார் அளித்த மாணவியை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என சிவசங்கர் பாபா வைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கி வருகிறது சுஷில்ஹரி சர்வதேச பள்ளி. இதன் நிறுவனராக இருப்பவர் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா. இவர் பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான தகவல் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சாமியார் சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். நீதிபதி வி.சிவஞானம் அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2007 ஆம் ஆண்டு சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவி 2021 ஆம் ஆண்டில் சிவசங்கர் பாபா மீது புகாரளித்ததாக காவல்துறை கூறுவதாக தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த மாணவி ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும், மின்னஞ்சல் மூலமாக அவர் சிவசங்கர் பாபா மீது புகாரளித்ததாக கூறப்படும் நிலையில் புகாரின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுவதாகவும் வழக்கறிஞர் கூறினார்.
இதனை அடுத்து, புகாரளித்த மாணவியை செப்டம்பர் 15 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த ஏற்பாடு செய்யுமாறு சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் உத்தரவு பிறப்பித்தார். அதுவரை இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சாமியார் சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications