ஆவடி ரயில் நிலையத்தில் சென்னை ஐஐடி மாணவி மர்ம மரணம்.. அடையாறிலிருந்து வந்தது ஏன்? பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவடி அருகே சென்னை ஐ.ஐ.டி கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    பட்டப்பகலில் காவல்நிலையம் எதிரே இளைஞர் படுகொலை

    ஆவடி அருகே இரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் தலை, முகம் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக அவ்வழியே வேலை செய்து வந்த ரயில்வே பணியாளர்கள் ரயில்வே காவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

     விசாரணை

    விசாரணை

    விசாரணையில், உயிரிழந்தது ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் பதான் என்பவரது மகள் மேகாஶ்ரீ (30) என்பது தெரியவந்தது .மேலும் திருமணமாகாத இவர் டெல்லியில் எம்.டெக் மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் தற்போது சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி.மைய விடுதியில் தங்கி ஐ.ஐ.டி கல்லூரியில் மூன்று மாத ஆராய்ச்சி படிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

     அடையாறில் தங்கியிருந்த மாணவி

    அடையாறில் தங்கியிருந்த மாணவி

    அடையாறில் தங்கி பயின்று வந்த மாணவி மேகா ஸ்ரீ எதற்காக ஆவடி வந்தார்? யாரையேனும் சந்திக்க ரயிலில் செல்லும்போது தவறி விழுந்தாரா அல்லது ரயில் தண்டவாளத்தை கிராஸ் செய்த போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா, இல்லை இது கொலையா என பல்வேறு கோணங்களில் ஆவடி இருப்பு பாதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     ஆராய்ச்சி மாணவர்கள்

    ஆராய்ச்சி மாணவர்கள்

    சென்னை ஐ.ஐ.டி கல்லூரி ஆராய்ச்சி மாணவி ஒருவர் ஆவடி தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடிக்கு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளுக்காகவும் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்காகவும் வருகை தருகிறார்கள்.

     அதிர்ச்சி சம்பவங்கள்

    அதிர்ச்சி சம்பவங்கள்

    அவ்வாறு வரும் மாணவர்களில் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் ஐஐடிக்கு வெளியே பல்வேறு இடங்களில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் ஒரு மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+