சென்னை ஐஐடி மாணவர்களை வாட்டும் மன அழுத்தம்.. காரணிகள் பல.. தீர்வுகள் எப்போது?
மாணவி பாத்திமா தற்கொலை குறித்து மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
Recommended Video
சென்னை: சென்னை ஐஐடி மாணவர்களிடம் பாத்திமா லத்தீபின் மரணம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கு இங்கு பல காரணிகள் உள்ளதாக மாணவர்களிடையே பொதுவான கருத்து நிலவுகிறது.
படிப்பு ஒரு பெரும் பிரச்சினை என்பது இவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. அதிக அளவிலான சுமை ஏற்படுவதால் மன அழுத்தம் இங்கு சாதாரணமான ஒன்று என்பது இவர்களின் கருத்தாகும்.

சில பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர்கள் கூறுகையில், "இங்கு படிக்க வரும் பெரும்பாலான மாணவர்கள் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மிகப் பெரிய பணக்கார பின்னணியைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கும், சாதாரண பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நிறைய குழப்பங்கள் ஏற்படுவது இங்கு சகஜமான ஒன்று.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களுடன் எளிதாக இணைந்து பழகுவதில் பல சிரமங்கள் உள்ளன. அவர்கள் எப்போதும் தனிமையில் இருக்கக் கூடிய வகையிலான சூழல்கள் இங்கு அதிகம். இங்குள்ள சூழலுக்கு அனைத்துத் தரப்பினருமே பழகிக் கொள்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன.
இதுதவிர பேராசிரியர்கள் - மாணவர்கள் இடையிலான உறவு பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதும் இன்னொரு காரணம். இப்படி மன அழுத்தம் ஏற்படக் கூடிய வாய்ப்புகளும், காரணிகளும் நிறையவே உள்ளன. ஆனால் இதுதான் என்று தனிப்பட்ட முறையில் எந்த காரணத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலை உள்ளதாக மாணவர்கள் கருதுகிறார்கள்.
எந்தக் காரணமாக இருந்தால் என்ன மன அழுத்தம் அறவே தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு சூழல் இருக்கவே கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். படிக்கும் பிள்ளைகள் நிம்மதியான சூழலில் படித்தால்தான் நிச்சயம் அவர்களால் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். சமூகமும் அவர்களால் பயன்பட முடியும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications