கள்ளக்காதலி கற்பகம் கண்டிஷன்.."லாரிக்கு குறுக்கே ஆட்டோ"..சென்னை அரசு மருத்துவமனை அக்கப்போரு.. தேவையா
சென்னை: மனைவியின் நடத்தை பிடிக்காமல், அவரை கண்டித்திருக்கிறார் லாரி டிரைவர்.. ஆனால், சொல் பேச்சை கேளாமல், மனைவி செய்த காரியம், இன்று ஒட்டுமொத்த குடும்ப வாழ்க்கையையும் பாழாக்கிவிட்டது.. லாரி டிரைவர் வாழ்க்கையில் புகுந்த ஆட்டோ டிரைவர் யார்? கற்பகத்துக்கு விதித்த நிபந்தனைகள் என்னென்ன? செங்குன்றத்தில் என்ன நடந்தது? சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
சென்னை செங்குன்றம் செல்வகணபதி நகரில் வசித்து வருபவர் பிரேம்குமார்.. இவருக்கு 35 வயதாகிறது.. லாரி டிரைவர்... இவரது மனைவி பெயர் கற்பகம்.. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

லாரி டிரைவர் சவாரி
பிரேம்குமார் லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூர்களுக்கு வேலை விஷயமாக சவாரிக்கு சென்றுவிடுவாராம்.. இதனால் வீட்டிலேயே சரிவர தங்குவதில்லை. இந்நிலையில், கற்பகத்திற்கு ஹரிகிருஷ்ணன் என்ற 30 வயது ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாகவும் மாறியிருக்கிறது.
பெரம்பூர் கென்னடி ஸ்கொயர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்.. பிரேம்குமார் லாரி சவாரிக்கு வெளியூர் சென்றுவிடும்போதெல்லாம், ஹரி கிருஷ்ணன் கற்பகம் வீட்டிற்கு வந்துவிடுவாராம்.. இப்படியே இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
ஆட்டோ டிரைவர் ஹரிகிருஷ்ணன்
ஆட்டோ டிரைவரான ஹரி கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.. இந்த குடிப்பழக்கத்துக்கு நாளடைவில் அடிமையாகிவிட்டார் ஹரிகிருஷ்ணன்.. இதனால் எப்போது பார்த்தாலும் போதையிலேயே இருப்பதுடன், கள்ளக்காதலி கற்பகத்தையும் டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளார்... அத்துடன் நிறைய கண்டிஷன்களை கற்பகத்துக்கு விதித்துள்ளார்.
அதாவது போன் செய்தால் உடனே எடுக்க வேண்டும், எப்போது உறவுக்கு அழைத்தாலும் வரவேண்டும், என அடுக்கடுக்காக பிரச்சனைகளை தர துவங்கிவிட்டார்.. இதனால் வெறுப்படைந்த கற்பகம், ஹரிகிருஷ்ணனை தவிர்க்க முயற்சி செய்துள்ளார். இதை புரிந்து கொண்ட ஹரிகிருஷ்ணன், உடனே கற்பகத்தின் வீட்டிற்கே சென்று கற்பகத்தை அடித்து துன்புறுத்திவிடுவாராம்..
மனம் நொந்துபோன கற்பகம்
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் ஹரிகிருஷ்ணன் கற்பகத்திற்கு போன் செய்துள்ளார். கற்பகம் போனை எடுக்கவில்லை.. இதனால் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன், அன்றைய தினம் இரவு 8 மணிக்கு கற்பகம் வீட்டிற்கு சென்று கற்பகத்தை சரமாரியாக அடித்துள்ளார்.
இதனால் உடம்பெல்லாம் படுகாயமடைந்த கற்பகம், செங்குன்றம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். ஆனால், ஹரிகிருஷ்ணன், ஆஸ்பத்திரிக்குள்ளேயே நுழைந்து கற்பகத்தை அடித்துள்ளார். உடனே மருத்துவமனையிலிருந்த செக்யூரிட்டிகள், குடிபோதையில் தகராறு செய்யும், ஹரி கிருஷ்ணனை எச்சரித்து அங்கிருந்து விரட்டிவிட்டனர்..
மனம் நொந்துபோன கற்பகம், கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக வந்துள்ளார்.. அப்போதும், கற்பகம் பின்னாடியே விரட்டி வந்துள்ளார் ஹரிகிருஷ்ணன் .. பெரியார் நகர் மருத்துவமனையில் வைத்து கற்பகத்தை சரமாரியாக தாக்கியுள்ளார்.
கத்தியோடு கிளம்பிய கணவர்
இதை கற்பகத்தின் மூத்த மகன் கண்ணாலேயே பார்த்துவிட்டார்.. உடனே தன்னுடைய அப்பா பிரேம்குமாருக்கு போன் செய்து, அம்மாவை யாரோ ஒருவர் அடிக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார், உடனே வீட்டிற்கு வந்து கத்தியை எடுத்துக் கொண்டு, பெரியார் நகர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.. அப்போது மருத்துவமனைக்கு வெளியிலேயே கற்பகத்தை மீண்டும் தாக்குவதற்காக ஹரிகிருஷ்ணன் தயாராக நின்று கொண்டிருந்தாராம்.. இதைப்பார்த்ததுமே ஆத்திரமடைந்து பிரேம்குமார், ஹரிகிருஷ்ணனை கத்தியாலேயே சரமாரியாக வெட்டியிருக்கிறார்.. இதனால், 5க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த வெட்டு காயமடைந்தார் ஹரிகிருஷ்ணன்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை
எனவே, அதே பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, இப்போது மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்..
இதனிடையே, ஏற்கனவே ஹரிகிருஷ்ணன் தாக்கியதில் காயமடைந்த கற்பகம் பெரியார் நகர் அரசு மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலறிந்து பெரவள்ளூர் போலீசார் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று பிரேம்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர..
சொல்ல சொல்ல கேட்காத கற்பகம்
பிரேம்குமாருக்கு தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் ஏற்கனவே தெரியுமாம்.. அதனால், கற்பகத்தை அடிக்கடி கண்டித்தும் எச்சரித்தும் வந்துள்ளார்.. ஆனால், கற்பகம் , கணவனின் பேச்சை காதில் போட்டுக் கொள்ளவில்லையாம். இதனால், தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக இருவரும் பேசாமலே இருந்து வந்துள்ளனர்.
தான் பேசாமல் இருந்தால், மனைவி எப்படியும் மனம் மாறிவிடுவார் என்று நினைத்திருந்தாராம்.. ஆனால், மனைவியை, கள்ளக்காதலன் அடித்து தாக்குவதை கேள்விப்பட்டதும்தான் ஆவேசமடைந்து ஹரிகிருஷ்ணனை சரமாரியாக வெட்டியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இப்போது பிரேம்குமார் ஜெயிலில் உள்ளார். மனைவி கற்பகம் பெரியார் நகர் அரசு மருத்துவமனையிலும், கள்ளக்காதலன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications