சென்னையே முழிக்குது.. வந்த இடத்தில் "பத்திக்கிடுச்சு".. சித்தாராவை காணாமாமே.. கணவன் தலையில் ஒரே "இடி"
சென்னை: மனைவியை காணாமல் கணவனும், அம்மாவை காணாமல் குழந்தைகளும் அழுதுகொண்டு ஏங்கி தவித்து வருகிறார்களாம்.. யார் அவர்கள்?
ஜார்க்கண்ட் மாநிலம் மகேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் நஜிபுல் ஷேக்.. இவரது மனைவி பெயர் ஷகினா... இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. இருவருமே பிழைப்பு தேடி சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.

சென்னை மேடவாக்கத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்துள்ளனர்.. இங்கு கட்டிடப்பணியில் 2 பேருமே தினக்கூலிகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார்கள்.. இந்த கட்டிட வேலையில், சித்தாரா என்ற இளைஞனும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவராம்.. இவரும் கூலி வேலைதான் செய்துவந்தார்.
தகாத உறவு: ஒரே இடத்தில் வேலை பார்த்ததால், ஷகீனாவுக்கும் சித்தாராவுக்கும் கள்ளக்காதல் பற்றிக் கொண்டுவிட்டது.. வந்த இடத்தில் கொஞ்ச நாளிலேயே இந்த உறவு படுஸ்டிராங் ஆகிவிட்டது.. இவர்களது விவகாரம், கணவர் ஷேக்குக்கு தெரியவந்துள்ளது.. இதனால், மனைவியை கண்டித்திருக்கிறார்.. எனவே, மனைவி திருந்திவிடுவார் என்று கணவரும் நம்பினார்.
ஆனால், சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு, சாயங்காலம் வீட்டுக்கு வந்துள்ளார் கணவர்.. அப்போது, 2 குழந்தைகள் மட்டுமே வீட்டில் இருந்திருக்கிறார்கள்.. அதனால், ஷகினா, வெளியே எங்காவது போயிருப்பார் என்று நினைத்தார்..
நேரம் ஆகியும் வராமல் போகவும், பல இடங்களில் மனைவியை தேடினார் கணவர்.. எங்குமே அவர் கிடைக்காததால், திடீரென சந்தேகம் வந்து, சித்தாராவை தேடினார் கணவர். அந்த இளைஞனையும் காணவில்லை. அப்போதுதான், தன்னையும், குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு சித்தாராவுடன் மனைவி ஓடிவிட்ட தகவல் உறுதியானது..
அதிர்ச்சி: இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல், நிலைகுலைந்து போனார் ஷேக்.. பிறகு, 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு பள்ளிக்கரணை போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்.. இளைஞனுன் ஓடிப்போன தன்னுடைய மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்றும் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை துவக்கி உள்ளனர்.
பழகின சில நாட்களிலேயே, எப்படி அந்த இளைஞனை நம்பி மனைவி ஓடிப்போனார்? என்று கணவர் அதிர்ந்து போய் இருக்கிறாராம்.. அந்த 2 குழந்தைகளுமே அம்மாவை காணாமல் அழுதுகொண்டேயிருக்கிறார்களாம்..!!!












Click it and Unblock the Notifications