விடிகாலை.. நடுரோட்டில் படுத்து புரண்டு கதறிய நிறைமாத கர்ப்பிணி.. கடவுளாய் வந்த இன்ஸ்பெக்டர் சித்ரா!
நிறைமாத கர்ப்பிணிக்கு பெண் இன்ஸ்பெக்டர் பிரசவம் பார்த்துள்ளார்
Recommended Video
சென்னை: இன்ஸ்பெக்டர் சித்ராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. நடுரோட்டில் துடித்து கிடந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்துள்ளார் சித்ரா!
சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பானுமதி. இவர் நிறைமாத கர்ப்பிணி. கணவர் நைட் டியூட்டி வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாருமே இல்லை. விடிகாலை 2.45 மணி இருக்கும்.. பானுமதிக்கு பனிக்குடம் உடைந்து பிரசவ வலி எடுத்திருக்கிறது.
இதனால் பயந்துபோன பானுமதி, தானே வலியுடன் மெதுவாக எழுந்து ஒரு ஆட்டோவை பிடிக்க ரோட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அந்த நேரம் பார்த்து ஒரு ஆட்டோவும் வரவில்லை. அதற்கு மேல் பானுமதியால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

இன்ஸ்பெக்டர்
வலியுடனே, சூளைமேடு ஹைவேயில் அப்படியே படுத்துவிட்டார்.. கை கால்களை உதைத்து கொண்டு துடித்தார்.. அந்த சமயம் பார்த்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சூளைமேடு இன்ஸ்பெக்டர் சித்ரா ஜீப்பில் வந்தார். பானுமதியின் நிலைமையை பார்த்ததும் பதறி போனவர், தன்னுடைய ஜீப்பிலேயே ஏற்றி கொண்டு ஆஸ்பத்திரி போகலாம் என்று முயன்றிருக்கிறார்.

ரத்தப் போக்கு
ஆனால், பனிக்குடம் உடைந்து போனதையும், ரத்தப் போக்கு அதிகமாக இருந்ததையும் கண்டு, அதிர்ச்சி அடைந்தார். அந்தநிலையில் ஜீப்பில் ஏற்றி கொண்டு செல்வதும் சரிவராது என்று உணர்ந்தார். அதனால் தன்னுடைய ஜீப்பை எடுத்து கொண்டு, அந்த பகுதியில் குப்பை சேகரிக்கும் பெண்களை துணைக்கு அழைத்தார்.

ஆம்புலன்ஸ்
அவர்களின் உதவியுடன் பானுமதிக்கு இன்ஸ்பெக்டர் சித்ரா பிரசவம் பார்த்தார். கொஞ்ச நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன்பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் பானுமதியை, குழந்தையுடன் பத்திரமாக ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பாராட்டுக்கள்
இப்போது தாய்-சேய் நல்ல சவுக்கியத்துடன் இருக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் சித்ராவின் இந்த துணிச்சல் நிறைந்த காரியத்துக்கும், உயரிய மனிதாபிமானத்துக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications