இதெல்லாம் வேற லெவல்.. ஸ்பாஞ்ச் சிட்டியாக உருவெடுக்கும் சென்னை.. வியந்து போன மக்கள்.. என்னங்க இது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை ஸ்பாஞ்ச் சிட்டியாக உருவாக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே இரண்டு ஸ்பாஞ்ச் பார்க் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் கூடுதலாக 40 இடங்களில் பார்க் அமைக்க உள்ளனர்.

சென்னையில் முன்பெல்லாம் எப்போது மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவாக தண்ணீர் அதிக நேரம் தேங்கி இருக்கும். அதன்படியே சென்னையில் கடந்த வாரம் கனமழை பெய்து வந்தது. அதிலும் கடந்த வாரம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்தது.

Chennai is becoming a sponge city: Morer sponge parks to come in the city soon

ஆனால் சென்னையில் கனமழை பெய்தும் கூட.. ஜூன் மாதத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தும் கூட எங்கும் வெள்ளம் தேங்கவில்லை. ஆனால் தற்போது சென்னையில் வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க வெள்ள நீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்கள் தற்போது பலன் அளிக்க தொடங்கி உள்ளன.

சாலை ஓரங்களில் பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர் .முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் இந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு சென்னை முழுக்க 90% நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஸ்பாஞ்ச் சிட்டி: இந்த நிலையில்தான் சென்னையை ஸ்பாஞ்ச் சிட்டியாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருக்கும் பொது இடங்களை, திறந்தவெளி பகுதிகளை ஸ்பாஞ்ச் பகுதிகளாக மாற்ற முடிவு செய்துள்ளனர். அதன்படி சென்னையில் மண்டலம் 6 இல் உள்ள முரசொலிமாறன் பூங்காவில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஸ்பாஞ்ச் பூங்கா பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சமீபத்திய இங்கே பெய்த மழையில் வெள்ள நீர் இந்த பகுதியில் வேகமாக நிரம்பி உள்ளது.

சுற்றுவட்டாரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை உடனடியாக வெளியேற்ற இந்த பார்க் உதவியாக உள்ளது. இது ஒரு குளம் போன்ற அமைப்பு ஆகும். மற்ற பகுதிகளில் உள்ள தண்ணீர் இங்கே நிரம்ப வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கும். மழை காலங்களில் மற்ற இடங்களில் இருந்து தண்ணீர் இந்த இடத்திற்கு வேகமாக வரும். மழை பெய்தால் தானாக இந்த பகுதிகள் தண்ணீரை உறிஞ்சி பூமிக்கு அனுப்பி விடும்.

கடற்பாசி: முதல் கட்டமாக இப்படி பல இடங்களில் ஸ்பாஞ்ச் பூங்காக்களை அமைக்க உள்ளார். கடற்பாசிகள் மூலம் இந்த ஸ்பாஞ்ச் பூங்காக்களை முதல் கட்டமாக அமைக்க உள்ளனர். வித்தியாசமான கட்டுமானம் மூலம் தரைப்பகுதி வேகமாக தண்ணீரை உறிஞ்சும் வசதியை ஏற்படுத்த உள்ளனர். 57 பூங்காக்களை தேர்வு செய்து அதில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைப்புகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்

மாத்தூர், எம்எம்டிஏ, திருவெற்றியூர் உள்ளிட்ட 5 இடங்களில் இருக்கும் பூங்காக்களை முதல் கட்டமாக தேர்வு செய்து ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்க உள்ளனர். இயற்கையாக தண்ணீரை உறிஞ்சி அது பூமிக்கு கீழ் தண்ணீரை அனுப்பும். இதற்காக 7 கோடி ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

மழைக்காலம்: இந்த மழை காலத்திற்கு முன்பாக 42 இடங்களில் பூங்காவை கட்டி முடிக்கும் முடிவை எடுத்துள்ளனர். இந்த பூங்காக்கள் கனமழையின் போது தண்ணீரைச் சேகரித்து சேமிக்கும் திறனைக் கொண்டுள்ளன, சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தைத் தடுக்கின்றன. இந்த பூங்காக்கள் நிலத்தடி நீர் மட்டத்தை ரீசார்ஜ் செய்வதற்கும் நகர்ப்புறங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கவும் வழிவகை செய்கின்றன.

அதேபோல் இந்த பூங்காக்கள் உள்ளேயே சிறிய குளங்கள், அகழிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த பகுதிகளுக்கு வெள்ளநீர் குழாய்கள் வழியாக தண்ணீர் செல்லும் வசதிகள் ஏற்படுத்தப்படும். அதன் மூலம் பூங்கா உள்ளே குளிர்ச்சியாக குளங்களும் இருக்கும். தண்ணீரும் மழை காலத்தில் எளிதாக வெளியேறும். இதனால் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வரும் காலத்தில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக 57 பூங்காக்களை தேர்வு செய்து அதில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைப்புகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+