Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ஒவ்வொரு தெருவுலயும்.. வந்து சோதிக்க போறாங்க! உதயநிதி போட்ட ஆர்டர்.. ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வர உள்ள மழை காலத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று சிறப்பு கூட்டம் நடந்தது. நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழைக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பித்தது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், வருவாய்த்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மின் வாரியம், இரயில்வே துறை, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட சேவைத்துறைகளுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

weather

இக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:

கடந்த ஆய்வுக்கூட்டத்தில் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு நம்முடைய அரசு அலுவலர்கள் உரிய விளக்கத்தினையும், திட்டங்களின் தற்போதைய நிலையினையும் தெரிவித்துள்ளார்கள். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட திட்டப்பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும். சாலைகளில் தேங்கும் மழைநீரினை அகற்ற போதுமான அளவில் மோட்டார் பம்புகளை வெளியூர்களிலிருந்து மழை தொடங்குவதற்கு முன்பே கொண்டு வரவேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு தங்கவைப்பதற்கான நிவாரண மையங்களில் சுகாதாரமான முறையில் குடிநீர், பால், பாய், போர்வை போன்ற அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இப்பொழுதே தயார்நிலையில் இருக்க வேண்டும். மழைக்காலங்களிலும் நீரேற்று நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும்.

மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்திட வேண்டும். மேலும், மழைநீர் வடிகால்களில் உள்ள மனித நுழைவு பகுதி மற்றும் இரண்டு மனித நுழைவு பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும். இதில் எந்த தவறுகளும் நிகழாவண்ணம் பணியினை சரியாக மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டாலும், ஒரு நாளைக்கு மின்சாரம் இல்லையென்றால் நம்முடைய ஒட்டுமொத்த பணிகளையும் மக்கள் கேள்விக்குட்படுத்துவார்கள். அதனால் மழைக்காலத்தில் மின் வாரியப் பணி என்பது மிகவும் முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் பணியாற்றிட வேண்டும். கழிவுநீர் கால்வாய்களில் தன்னார்வலர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். மழைக்கு முன்பாக அவர்களை அழைத்துப் பேசுவது மிகவும் சிறப்பாக அமையும்.

அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்கள் பணிகளில் நீண்ட அனுபவம் உள்ளவர்கள். பேரிடர் காலங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர்கள் தான் பதிலளிப்பவர்கள். எனவே, அலுவலர்கள் அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பில் இருந்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, விரைந்து பணியாற்றிட அலுவலர்கள் ஆய்வுப்பணிகளுக்கு செல்லும் போது நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல வேண்டும்.

நிதி இல்லாததால் உடனடியாக பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்ற நிலையினை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, சென்னையைப் பொறுத்தவரை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளுக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும். அதனால் தான் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தங்களுடைய திட்டப்பணிகளுக்கான நிதியை கழிவுநீர் குழாய் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற மக்களுடைய அடிப்படை அத்தியாவசியப் பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதியையும் இந்தப் பணிகளுக்கு பயன்படுத்திட வேண்டும்.

சென்னை மெட்ரோ நிறுவனத்தின் பணிகள் நடைபெறும் இடங்களில் பெருமழையின்போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இந்த ஆய்வுக்கூட்டத்தினைத் தொடர்ந்து, அமைச்சர் பெருமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து மழைக்காலப் பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளோம். கடந்த ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்தோம். இன்று நடைபெறவுள்ள ஆய்வுக்கூட்டம் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அமெரிக்காவில் இருந்தபோதும், என்னையும், அமைச்சர் பெருமக்களையும் தொலைபேசியில் அழைத்து தகவல்களை தெரிந்து கொண்டார். சென்னையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்கள். இந்த ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கருத்துக்கள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும். எனவே, மழைக்காலத்திற்கு முன்பாக துறைகள் அனைத்தும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து செய்து முடிக்குமாறு தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மழைக்காலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து இடங்களிலும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நீரிறைக்கும் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும். சாலை வெட்டும் பணியினை குறித்த நேரத்தில் முடித்து, சாலை சீரமைக்கும் பணிக்காக பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். சாலையை வெட்டும் போது முறையான தடுப்பு அரண்களை அமைக்க வேண்டும். மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட வேண்டும். பருவமழைக்கு முன்னதாக பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீராக உயர்த்தி அமைக்க வேண்டும். மின்மாற்றி மற்றும் மின்பெட்டிகள் சாலையில் இருந்து 3 அடி உயரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரயில்வே பாதைகளில் கீழே உள்ள 42 எண்ணிக்கையிலான குறுக்கு மதகுகளை முழுமையாக தூர்வாரிட வேண்டும். நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் பராமரிக்கப்படும் சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் குறுக்கு மதகுகளை தூர்வார வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையின் போது, தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கவைப்பதற்கு 169 நிவாரண மையங்களை தயார்நிலையில் உள்ளது. மழைநீரினை வெளியேற்ற பல்வேறு குதிரைத் திறன்கள் கொண்ட 1183 மோட்டார் பம்புகள், 2 ஆம்பிபியன், 3 மினி ஆம்பிபியன், 6 ரோபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்கள், மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்ய கழிவுநீரை உறிஞ்சி சுத்தம் செய்யும் 7 இயந்திரங்கள், மழைக்காலங்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் விழும் மரங்களை அகற்றிட 305 மரஅறுவை இயந்திரங்கள், ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் மர அறுவை இயந்திரங்கள் மற்றும் 24 Telescopic Pruners இயந்திரங்கள், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்பதற்காக 109 படகுகள் மற்றும் பாப்காட், ஜே.சி.பி. ஆம்பிபியன், மரஅறுவை இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், கனரக/இலகு ரகவாகனங்கள் உட்பட 1,019 இயந்திரங்கள் தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்தில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள 6 சுரங்கப்பாதைகள் என 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் வெளியேற்றும் வகையில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் 388 அம்மா உணவகங்கள் மற்றும் 35 மைய சமையற் கூடங்கள் (Cluster Kitchen) பொது சமையல் கூடங்களாக செயல்படும் வகையில் தயார்நிலையில் வைத்தல். மின்கசிவு ஏற்படாமல் இருக்க தூண் மற்றும் ஃபியூஸ் பாக்ஸ், தொங்கும் வயர்களை சரிபார்க்க மின்வாரிய குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினருக்காக 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 101 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள், 1000 தற்காலிகப் பணியாளர்களை 200 வார்டுகளில் பணியமர்த்துதல், மரம் வெட்டும் பணிகளுக்கு 150 தற்காலிக பணியாளர்களை பணியமர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், மழைக்கால முன்னெச்சரிக்கையாக ஆபத்தான விளம்பரப் பலகை மற்றும் உயர்கம்பங்களை அகற்றிட வேண்டும்.

ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கண்காணிப்பு மையத்தில் (ICCC) சுரங்கப்பாதைகளில் மழைக்காலங்களில் நீர்த்தேக்கத்தை தொடர்ந்து கண்காணித்து அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+