சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் பனி மூட்டம் கிடையாது.. மொத்தமும் புகைதான்.. ஆரோக்கியமில்லை.. வெதர்மேன் ஷாக்கிங்!

சென்னையில் தற்போது பனி மூட்டம் இல்லை, புகை மூட்டம்தான் இருக்கிறது, காற்று ஆரோக்கியமற்ற நிலையை அடைந்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையிலும் மாசடைந்த காற்று... ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக தகவல்

    சென்னை: சென்னையில் தற்போது பனி மூட்டம் இல்லை, புகை மூட்டம்தான் இருக்கிறது, காற்று ஆரோக்கியமற்ற நிலையை அடைந்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    டெல்லி காற்று மாசுபாடு இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே சமயம் டெல்லி காற்று மாசுபாட்டால் சென்னையிலும் காற்று மாசுபாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான காரசார விவாதமும் நடந்து வருகிறது.

    சென்னையில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து வருவதாகவும், காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

    சுவாசிக்க தகுதியற்ற நிலை.. சென்னையிலும் மாசடைந்த காற்று.. கண்காணிப்பு மையம் எச்சரிக்கை!சுவாசிக்க தகுதியற்ற நிலை.. சென்னையிலும் மாசடைந்த காற்று.. கண்காணிப்பு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு வெதர்மேன் எப்படி

    தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்ட்டில் சென்னையில் காற்றின் அளவு கண்டிப்பாக ஆரோக்கியமற்ற நிலையை அடைந்து இருக்கிறது. ஆனால் டெல்லி அளவிற்கு சென்னை இன்னும் ஆபத்தான நிலையை அடையவில்லை. ஆனால் இந்த புகை எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை.

    என்ன ஆதாரம்

    என்ன ஆதாரம்

    நான் கொடுத்து இருக்கும் ஆதாரங்களை வைத்து மக்களே புகை ஏன் ஏற்படுகிறது, காற்று மாசு எப்படி இருக்கிறது என்று தீர்மானித்துக் கொள்ளலாம். சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்.

    என்ன ஆதாரம்

    என்ன ஆதாரம்

    நான் கொடுத்து இருக்கும் ஆதாரங்களை வைத்து மக்களே புகை ஏன் ஏற்படுகிறது, காற்று மாசு எப்படி இருக்கிறது என்று தீர்மானித்துக் கொள்ளலாம். சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்.

    புகை எப்படி

    புகை எப்படி

    சென்னையில் இன்று நாம் பார்ப்பது பனி மூட்டம் கிடையாது அது புகை. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. பனிமூட்டம் பிரச்சனை கிடையாது, ஆனால் புகைதான் பிரச்சனை.

    டெல்லியில் இருந்து வருமா?

    டெல்லியில் இருந்து வருமா?

    அதேபோல் டெல்லி மற்றும் வடஇந்தியாவில் இருந்து சென்னைக்கு புகை வராது என்று கூறுவதும் சின்ன பிள்ளைதனம். ஏனென்றால் காற்று வருவதற்கு பேருந்தோ, ரயிலோ தேவையில்லை. கிழக்கு தொடர்ச்சி மலைகள் கூட இந்தியாவில் பெரிய மலைகள் கிடையாது.

    உலக மாடல்கள்

    உலக மாடல்கள்

    அதேபோல் உலக மாடல்களை வைத்து பார்த்தால் டெல்லியில் இருந்து சென்னைக்கு காற்று நகர்ந்து வருவதும் ஊர்ஜிதம் ஆகிறது, என்று கூறியுள்ளார். இதற்கான புகைப்படங்களை வெளியிட்டு வெதர்மேன் விளக்கி இருக்கிறார். ஆதாரத்திற்கான லிங்குகளை அவர் வெளியிட்டுள்ளார்.

    English summary
    Chennai is struggling with heavy smog, Which is pollution says Tamilnadu Weatherman in his facebook post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X