குன்றத்தூர் அபிராமி வழக்கில்.. பெண் இன்ஸ்பெக்டரை எச்சரித்த நீதிபதி.. நடந்த இரண்டு சம்பவங்கள்
சென்னை: குன்றத்தூர் பிரியாணி அபிராமி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் நீதிபதி இன்று இரண்டு விஷயங்களுக்காக கோபப்பட்டார். அதில் முக்கியமான விஷயம் குன்றத்தூர் ஆய்வாளர் தொடர்பானது. இந்த வழக்கில் குற்றவாளி அபிராமியை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் ஆஜர் படுத்தாததால், குன்றத்தூர் ஆய்வாளர் மீது நீதிபதி செம்மல் கண்டனம் தெரிவித்தார். அதேபோல் துப்பட்டா கட்டிக்கொள்ள கொடுத்தது யார் என்றும் காட்டமாக கேட்டார்.
சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சார்ந்தவர் விஜய் என்பவருடைய மனைவி அபிராமி தனது குழந்தைகளான ஏழு வயதாகும் அஜய் என்ற மகனையும், 4 வயதாகும் கார்னிகா என்ற மகளையும் , தனது பிரியாணி கடை காதலனுக்காக கொலை செய்திருந்தார். இந்த வழக்கில் குன்றத்துர் அபிராமி, மற்றும் அவரது காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் மீதான வழக்கு ஏழு ஆண்களாக நடந்து வந்தது. முதலில் இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு என இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு குன்றத்தூர் காஞ்சிபுரம் மாவட்த்தில் வந்தது.இதையடுத்து குன்றத்தூர் அபிராமி வழக்கு காஞ்சிபுரத்தில் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்கு முன்னதாக குற்றவாளி அபிராமியை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் ஆஜர் படுத்தாததால் குன்றத்தூர் ஆய்வாளருக்கு நீதிபதி செம்மல் கண்டனம் தெரிவித்தார். குன்றத்தூர் ஆய்வாளர் மீது 174,175,176 ஆகிய 3 பிரிவின் கீழ் கடமையை செய்யாதது, கடமையை மீறுதல் உள்ளிட்ட வழக்குக்கு பதில் அளிக்குமாறு நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். ஆய்வாளர் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என தெரிவித்தார். இதனை அடுத்து, நீதிபதி இது போன்ற காரணங்களை இனி தெரிவிக்க கூடாது, முதலும் கடைசியுமாக இருக்கட்டும் என்று கடுமையாக எச்சரித்தார்.
பிறகு தீர்ப்பினை வழங்க தொடங்கினார். அபிராமி மற்றும் காதலன் மீனாட்சிசுந்தரம் இருவரும் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். ஏற்கனவே ஏழு ஆண்டுகள் சிறையில் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு அபிராமி மற்றும் மீனாட்சிசுந்தரம் இருவரும் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஏற்க மறுத்த நீதிபதி, சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிமன்றம் வளாகத்திற்கு வந்திருந்த அபிராமி துப்பட்டாவால் முகத்தை மூடி அழித்துவரப்பட்து போது, துப்பட்டாவால் கழுத்தை நெரித்து விபரீத முடிவெடுக்கக்கூடும் எனவே இதனை அனுமதிக்க கூடாது என காவலர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். இந்த தீர்ப்பு காரணமாக காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications