Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்தேகமே வேண்டாம்! "இன்றும் கனமழை கொட்டும்!" சென்னை உட்பட பல இடங்கள்! வெதர்மேன் தந்த மேஜர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பல இடங்களில் கடந்த வாரம் வரை வெயில் அதிகமாக இருந்த நிலையில், திடீரென இப்போது கிளைமேட் மாறி மழை பெய்து வருகிறது. இன்று வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாகவே பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வந்தது. இதனால் ஹிமாச்சல் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் கடுமையான வெள்ளம் கூட ஏற்பட்டது.

Chennai, Kanchipuram, Tiruvallur will get rain today also says Tamilnadu weatherman

இருப்பினும், தமிழ்நாட்டில் வெப்பம் அதிகமாகவே இருந்தது. இங்கு மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரியை கூட தாண்டியது. இதைப் பல வானிலை ஆய்வாளர்கள் இரண்டாவது சம்மர் எனக் கூட குறிப்பிட்டனர்.

கிளைமேட் மாற்றம்: ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கிளைமேட் டக்கென மாறியது. பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. அதிலும் குறிப்பாகச் சென்னையில் பல இடங்களில் விடிய விடியக் கனமழை பெய்தது. நகர்ப் பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

திடீரென இரவு முழுக்க பெய்த இந்த கனமழையால் பொதுமக்கள் குஷியானார்கள். இது வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதற்கிடையே இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இன்று வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன்: இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "சென்னையில் பெய்த கனமழைக்குப் பிறகு, இன்று மாலை/ இரவு காஞ்சிபுரம், திருவள்ளூர் சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், கடலூர், டெல்டா பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கொடைக்கானலில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கடந்த 24 மணி நேரத்தில் எங்கே எந்தளவுக்கு மழை பெய்துள்ளது என்பது குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதன்படி அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் 144 மிமீ தீவிர மழை கொட்டியுள்ளது. அதேபோல சென்னை அம்பத்தூரில் 112 மீமி மழையும், பூவிருந்தவல்லி பகுதியில் 103 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

இதேபோல டிஜிபி அலுவலகத்தில் 94 மிமீ மழை பெய்துள்ள நிலையில், ஆலந்தூரில் 89 மிமீ மழையும், திருவள்ளூரில் 81 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல மாம்பலம், கிண்டி, பெரம்பூர், எழும்பூர், சோழிங்கநல்லூர், அயனாவரம், புரசைவாக்கம் என்று பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டியுள்ளது அதில் தெரிய வருகிறது.

இமாச்சல் பிரதேசம்: அதேபோல இம்மாச்சல பிரதேசத்திலும் கனமழை கொட்டி வரும் நிலையில், அது குறித்தும் அவர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "இமயமலை அடிவாரத்தில் இருக்கும் இமாச்சல பிதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை கொட்டி வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசம், ஜம்மு மற்றும் உத்தரகண்ட் பகுதிகளிலும் இன்று அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது" எனப் பதிவிட்டிருந்தார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+