எங்க அண்ணே சேகர்பாபு இருக்காரு; ஓ.பி.எஸ்.சை காரை விட்டு இறங்கவிடாமல் சூழ்ந்த மக்கள்!
சென்னை: சென்னை கெல்லிஸ் பி.ஆர்.கார்டன் பகுதியில் மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து சரமாரி கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
''எங்க அண்ணே சேகர்பாபு இருக்காரு, இப்ப மட்டும் ஏன் வர்றீங்க'' என மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சரமாரி கேள்வி எழுப்பியதால் ஓ.பி.எஸ். காரை விட்டே கீழிறங்காமல் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை புரசைவாக்கம், கெல்லீஸ், உள்ளிட்ட இன்னும் பல இடங்களில் சேகர்பாபு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அவருக்கான ஆதரவு வட்டத்தை கட்சியை கடந்து மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மழைவெள்ளம்
சென்னையில் மீண்டும் மழை வெளுத்து வாங்கி வருவதால் நகரின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அந்த வகையில் கெல்லீஸ் பி.ஆர்.கார்டன் பகுதியில் மழைவெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்வையிடச் சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுமக்கள் சூழ்ந்து நின்று தங்கள் ஆதங்கத்தை கொட்டத் தொடங்கினர். இப்ப மட்டும் ஏன் வர்றீங்க என தொடங்கி இன்னும் பல விவகாரங்களை சுட்டிக்காட்டி அவர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்ததால் ஓ.பி.எஸ். காரைவிட்டே கீழிறங்க முடியாத நிலை ஏற்பட்டதாம்.

அமைச்சர் சேகர்பாபு
முன்னாள் மாவட்டச் செயலாளரும், ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளருமான பாபு எவ்வளவோ முயன்றும் மக்கள் கொந்தளிப்பு குறையாததால் நிவாரணப் பொருட்களை கொடுக்க முடியாமலும், மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட முடியாமலும் அங்கிருந்து ஓ.பி.எஸ்.கிளம்பிவிட்டார். சென்னையை பொறுத்தவரை பிராட்வே, துறைமுகம், மண்ணடி, சென்ட்ரல், புரசைவாக்கம், கெல்லீஸ், புளியந்தோப்பு, உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம்.

மக்கள் செல்வாக்கு
இதற்கு காரணம் ஸ்டாலின் பிறந்தநாள், கருணாநிதி பிறந்தநாள், உதயநிதி பிறந்தநாள் என ஏதேனும் விழாவை மையமாக வைத்து தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் அவர் வழங்கி வருவதே காரணமாகும். இதனால் அடித்தட்டு மக்களின் அன்பை பெற்றவராக அமைச்சர் சேகர்பாபு திகழ்கிறார். இதனிடையே இவரைப் போலவே மறைந்த அமமுக நிர்வாகி வெற்றிவேலுவும் இந்தப் பகுதி மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

பொறுப்புக்கு அழகல்ல
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர், இது போன்ற இடங்களுக்கு செல்வதற்கு முன் உள்ளூர் நிர்வாகிகள் மூலம் உரிய முன்னேற்பாடுகள் செய்யாமலா செல்வது என சொந்தக் கட்சிக்குள்ளேயே முனுமுனுக்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications