கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நீங்கள் செல்லக்கூடிய பேருந்து, எந்த நடைமேடையில் நிற்கும் ? முழு விவரம்
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பலரும் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.. வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், மக்கள் இந்த வார இறுதியிலேயே சொந்த ஊர் செல்வார்கள். அப்படி சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கம் சென்று தான் ஏற வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நீங்கள் செல்லக்கூடிய பேருந்து, எந்த நடைமேடையில் நிற்கும் என்ற விவரத்தை பார்ப்போம்.
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை கொண்டாட வசதியாக மறுநாள்(1-ந்தேதி) அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதற்கு அடுத்ததாக சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால் தொடர்ந்து 4 நாட்கள் அரசுஅலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறையாகும். இதனால் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பெரும்பாலானவர்கள் செல்வதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ரெயில்களில் முன்பதிவுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்து விட்டன. சிறப்பு ரயில்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதிலுமே இன்று காலை 8 மணிக்கு புக்கிங் ஆரம்பித்த உடனேயே தீர்ந்தது. ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை மிகமிக அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் அரசு பஸ்களையே நம்பி உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது. அப்போது அமைச்சர் சிவசங்கர் கூறும் போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி முதல் 30-ந்தேதி வரையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் இயக்கக்கூடிய 2,092 பஸ்கள் (3 நாட்களுக்கு 6,276) மற்றும் 4,900 சிறப்பு பஸ்கள் என 11 ஆயிரத்து 176 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மற்ற இடங்களுக்கு இதே நாட்களில் 2,910 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 14 ஆயிரத்து 86 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பண்டிகை முடிந்த பின்பு பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு நவம்பர் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 3,165 சிறப்பு பஸ்கள் என 9,441 பஸ்கள் மற்றும் பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 12 ஆயிரத்து 606 பஸ்களும் இயக்கப்பட உள்ளது என்றார்.
சென்னையிலிருந்து 28-ந் தேதி முதல் 30-ந் தேதிவரை குறிப்பிட்ட சில பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாகவும் அமைச்சர் சிவசங்கர் கூறினார். அதன்படி, கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்றார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பஸ்கள் வழக்கமாகவும், திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாகவும் பஸ்கள் இயக்கப்படும் என்றும் கூறினார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் 9445014436 என்ற செல்போன் எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்வது உள்ளிட்ட புகார்களுக்கு 18004256151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையும் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகள் பஸ்களின் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள பல்வேறு இடங்களில் தகவல் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பஸ் நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
இதனிடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நீங்கள் செல்லக்கூடிய பேருந்து ,எந்த நடைமேடையில் நிற்கும் என்ற விவரத்தை பார்ப்போம்.
நடைமேடை : 01
நாகர்கோவில் மார்த்தாண்டம் , கன்னியாகுமரி
திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர்
செங்கோட்டை
நடைமேடை : 02
பாபநாசம் ஸ்ரீ வில்லிபுத்தூர்
சிவகாசி , திருவனந்தபுரம்
உடன்குடி, கருங்கல்
நடைமேடை : 03
மதுரை ,சிவகங்கை , காரைக்குடி , தொண்டி
தேவக்கோட்டை , பரமக்குடி , இராமேஸ்வரம்
ஏர்வாடி , வீரசோழன் , கீரமங்கலம்
சாயல்குடி , பொன்னமராவதி
கமுதி
நடைமேடை : 04
திருச்சி , கும்பகோணம் , கரூர்
தஞ்சாவூர் , பொள்ளாச்சி
மன்னார்குடி , தீண்டுக்கல்
பேராவூரணி , தேனி
பட்டுக்கோட்டை
கம்பம் / குமுளி
நடைமேடை : 05
பெரம்பலூர் , மன்னார்குடி
அரியலூர் , நன்னிலம்
துறையூர் , வேளாங்கண்ண
கும்பகோணம் , மயிலாடுதுறை
தஞ்சாவூர் , திருவாரூர்
நாகப்பட்டினம்.
நடைமேடை : 06
சேலம் , திருவாரூர்
எர்ணாகுளம் , திருப்பூர்
குருவாயூர் , பொள்ளாச்சி
ஊட்டி TTA , மேட்டுப்பாளையம்
கோயம்புத்தூர்
ஈரோடு , நாமக்கல்
கரூர்
நடைமேடை : 07
வந்தவாசி , திருவண்ணாமலை
போளூர் , செஞ்சி
மேல்மலையனூர்
நடைமேடை : 08
திண்டிவனம் , விழுப்புரம்
திருக்கோவிலூர் , சங்கராபுரம் , கள்ளக்குறிச்சி
ஜெயங்கொண்டம் , அரியலூர்
நடைமேடை : 09
புதுச்சேரி , கடலூர்
சிதம்பரம் , நெய்வேலி ,
காட்டுமன்னார்கோவில் , விருத்தாச்சலம்
திட்டக்குடி
நடைமேடை : 10 & 11 & 12 & 13 & 14
ஆம்னி பேருந்துகள்
நிற்கும் இடம்.












Click it and Unblock the Notifications