சென்னை கீழ்ப்பாக்கம் ஹோட்டலில் ரூம் எடுத்து போதை பார்ட்டி.. பெண்கள் உள்பட கொத்தாக சிக்கிய 18 பேர்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் அறை எடுத்து தங்கி போதை பார்ட்டி நடத்திய 3 பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் இசையமைப்பாளரின் மகள் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் 18 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் ஈவிஆர் சாலையில் பிரபல பப்பில் கஞ்சா பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஓட்டல் அறைகளில் சோதனையிட்டனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை.

அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதன்பின்னர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 3 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் இவர்கள் தான் அந்த பார்ட்டியில் பங்கேற்றதும், மெத்தபெட்டமைன் போதைப்பொருள், கஞ்சா பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 18 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களது 3 கார்கள், 2 பைக்குகள், 18 செல்போன்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், இதே பகுதியில் உள்ள பப்பில் நேற்று முன் தினம் பார்ட்டி நடந்ததாகவும், அந்த பார்டியில் தான் இவர்கள் போதைப்பொருள், கஞ்சா பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதற்கு பிறகு தான் அதே பகுதியில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது.
மேலும் போலீசார் அவர்களிடம் தனித்தனியாக விசாரித்ததில், கைது செய்யப்பட்டதில் ஒரு பெண் சினிமா இசையமைப்பாளரின் மகள் என தெரியவந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர் யார் என்று தகவல் வெளியாகவில்லை. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றம் அவர்கள் 18 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications