சென்னை கொளத்தூரில் "விழுந்த" பிள்ளையார்.. அதென்ன ஸ்பாட்டில் "பிறை" வடிவ நிலா.. மலைத்து பார்த்த மக்கள்
சென்னை: சென்னை கொளத்தூர் பகுதி மக்கள் அசந்துபோய் உள்ளார்கள்.. தேசப்பற்று மிகுந்த விநாயகர் சிலைகளை கண்டு பிரம்மித்து போய்விட்டார்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சில விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை: குறிப்பாக, விநாயகர் சிலை அடித்தளத்தில் இருந்து மொத்தம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. சிலைகளை பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு அருகில் வைக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின்போது மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாகவோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடவோ, அரசியல் கட்சிகள் அல்லது மத ரீதியிலான தலைவர்களுக்கு ஆதரவான பதாகைகளையோ, விளம்பர தட்டிகளையோ வைக்கக் கூடாது, விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் சிலைகளை கரைக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றெல்லாம் என்று சென்னை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
கண்கவர் சிலைகள்: இதனிடையே, கண்ணை கவரும் விநாயகர் சிலைகள் பொதுமக்களை கவர்ந்து வருகின்றன.. 15 அடி உயரம், 650 கிலோ எடையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான பிள்ளையாரை புதுச்சேரியில் இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள்..
ஊட்டியில் உள்ள ஒரு வீட்டில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்லாயிரம் விநாயகர் உருவங்களை வைத்து, அவரின் தீவிர பக்தை பூஜை செய்து அசத்தியுள்ளார்.. திருப்பூரில் ரஜினியின் உருவத்தில் விநாயகர் சிலை வைத்து, ரசிகர் ஒருவர் அசரடித்துள்ளார்.
ராக்கெட் ஏவுதளம்: அந்தவகையில், சென்னை புறநகர் பகுதியான கீழ்கட்டளை மற்றும் கொளத்தூர் விநாயகபுரம், புரசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் 'சந்திரயான்-3' நிகழ்வை நினைவூட்டும் வகையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.. கீழ்கட்டளை பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த 'சந்திரயான்-3' விநாயகர் சிலையின் அருகில் ராக்கெட் ஏவுதளம் போல் வடிவமைக்கப்பட்டு அதில் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் ராக்கெட் புகையை கக்கியபடி மேலே செல்வது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ராக்கெட்டில் அமர்ந்த கோலத்தில் உள்ள விநாயகர், லேப்டாப் மூலம் 'சந்திரயான்-3' ராக்கெட்டை விண்ணில் ஏவுவது போன்று அமைந்திருந்தது.. அதுமட்டுமல்ல, அருகில் உள்ள டிவியில் கவுண்ட்டவுன் ஒலித்ததும், விநாயகர் இயக்கும் இந்த ராக்கெட் புகையை கக்கியபடி விண்ணை நோக்கி சுமார் 40 அடி தூரம் மேலே எழும்பி, மீண்டும் பத்திரமாக தரையில் இறங்குவது போலவும் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.
விநாயகர் சிலைகள்: இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.. சிலர், அதை வீடியோவாக எடுத்து, இணையத்திலும் பதிவிட்டுவிட்டனர்.
புரசைவாக்கம் நெடுஞ்சாலையிலும் இதே போல சந்திராயன் 3 போல வடிவமைக்கப்பட்டிருந்தது.. அண்டவெளி போல் கூடாரம் அமைக்கப்பட்டு, அதில் சந்திரனின் மேல் பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவது போல பிளக்ஸ் பேனரால் வடிவமைக்கப்பட்டு, ராட்சத விநாயகரின் முன்பு பெரிய அளவிலான பிறை வடிவ சந்திரன் வடிவமைக்கப்பட்டிருந்தது.
தேசப்பற்று: தமிழ்நாடு அரசு சின்னம், தேசிய கொடி என ராக்கெட் வடிவில் கூடாரமும், அதற்குள்ளே விநாயகர் சிலையும் வைக்கப்பட்டிருந்தது காண்போரை சுண்டியிழுத்தது. இந்த தேசப்பற்று விநாயகர் சிலைகள்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications