பெண் ஐபிஎஸ் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த உதவி ஆணையர்.. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
சென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி நந்தம்பாக்கம் பகுதியில் இன்று வாகனங்களை ஒழுங்குபடுத்துமாறு கூறிய காவல் இணை ஆணையர் திஷா மிட்டலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை தனி விமானத்தில் சென்னைக்கு வருகை தந்த ஜனாதிபதி முர்மு, நாளை திருச்சி செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தபோது நந்தம்பாக்கம் வர்த்தக மையம் பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்த இணை ஆணையர் திஷா மிட்டல் கூறியுள்ளார். அப்போது திஷா மிட்டலிடம் சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயரதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததற்காக காவல்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications