செவ்வாழை தந்த ஹேப்பி நியூஸ்.. சென்னை கோயம்பேடு போறீங்களா? இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி.. இனி நிம்மதி
சென்னை: பருவமழை சொதப்பல், விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களினால், தமிழகத்தின் காய்கறிகளில் வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. அதுபோலவே, பழங்களின் விலையும் உயர்ந்துவிட்டதால், இல்லத்தரசிகள் பெருத்த கவலைக்கு ஆளானார்கள். இந்நிலையில், மகிழ்ச்சி தகவல் ஒன்று கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வெளிவந்துள்ளது.
செவ்வாழையை பொறுத்தவரை, வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் அடங்கியிருக்கும் சத்தான பழமாகும்.

சிறுநீரகம்: குடலில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகப்படுத்தும் சக்தி செவ்வாழைக்கு உண்டு. பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் சேர்வதை தடுக்கிறது. ரத்த அழுத்த பாதிப்பை சீராக்கி இதய நோய்களை தடுத்து நிறுத்தி செவ்வாழை உதவுகிறது.
கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள், சரும பாதிப்பு உடையவர்கள், உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் செவ்வாழையை விடாமல் சாப்பிட வேண்டும். உடல் உறுப்புகள் நுரையீரல், கல்லீரல், குடல், இதயம் போன்ற பிரதான உடலுறுப்புகளின் செயல்பாட்டிற்கு பேருதவி புரியக்கூடியது இந்த செவ்வாழைகள்தான்.
சத்துக்கள்: கால்சியம் நிறைந்த செவ்வாழைகள், பற்கள், எலும்புகளுக்கு உறுதியை தரக்கூடியவை. இந்த பழத்திலுள்ள பீட்டா கரோட்டீன், தமனிகள் தடிமனாவதை தடுக்கிறது. புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து காக்கிறது. இப்படி ஏராளமான நன்மைகளை தரக்கூடியது என்பதால்தான், செவ்வாழைகளுக்கு எப்போதுமே மவுசு கூடிக்கொண்டே வருகிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், செவ்வாழைகள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன.. அதேபோல, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், செவ்வாழை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த வாழைப்பழங்களை பதப்படுத்தி, சரக்கு வாகனங்கள் மூலம் தூத்துக்குடி போன்ற துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
விளைச்சல் பாதிப்பு: ஆனால், கடந்த சில மாதங்களாகவே செவ்வாழைக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தட்ப வெப்பநிலையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.. அதுமட்டுமல்ல, இல்லாத வகையில் புதுமையாக பழத்தின் எடை, வளர்ச்சி குறைந்திருப்பதாகவும் கூறியிருந்தனர்.
செவ்வாழை தார்கள் வழக்கமாக 80 முதல் 90கிலோ எடை இருக்கும் நிலையில், நிகழாண்டில் எடையானது பாதியாக குறைந்துவிட்டதாம்.. உரிய எடை இல்லாததால் இழப்பை சந்திப்பதாகவும், கோடை காலத்தில் நிலவும் அதிகமான வெப்பமும், காலம் தவறி வீசிய பருவக்காற்றும் தான் இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்திருந்தனர்.
செவ்வாழை : இதனால், கிலோ செவ்வாழை 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது... சில்லறை விலையில், ஒரு பழம் 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்டது.. இந்நிலையில், செவ்வாழையின் விளைச்சல் கூடியிருக்கிறது.. தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும், செவ்வாழை அறுவடை களைகட்டி வருகிறதாம்..
எனவே, சென்னை கோயம்பேடு சந்தைக்கு, செவ்வாழையின் வரத்து அதிகரித்திருப்பாகவும், இதனால், கிலோ செவ்வாழை விலை குறைந்து, 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.. இனிவரும் நாட்களில் ஏலக்கி, கற்பூரம், ரஸ்தாளி உள்ளிட்ட பழங்களின் வரத்தும் அதிகரிக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் விவசாயிகள்..!!!
காய்கறிகள்: இதனிடையே, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 700 வாகனங்களில் இருந்து 7000 ஆயிரம் டன் காய்கறிகள் வந்து குவிய துவங்கியிருக்கின்றன. ஒரு கிலோ வெங்காயம், காராமணி, சேம கிழங்கு ரூ.50க்கும், சின்ன வெங்காயம், முருங்கைகாய் ரூ.60க்கும், உருளை கிழங்கு ரூ.43க்கும், கேரட் ரூ.40க்கும், பீட்ரூட், புடலங்காய், சுரக்காய் ஆகியவை ரூ.25க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆதேபோல, சவ்சவ், முள்ளங்கி, கத்தரிக்காய், வெண்டைக்காய், கோவைக்காய், கொத்தவரங்காய் ஆகியவை ரூ.30க்கும், காளிபிளவர், பீர்க்கங்காய், முட்டைகோஸ் ரூ.35க்கும், சேனைக்கிழங்கு ரூ.66க்கும், பச்சை மிளகாய் ரூ.80க்கும், இஞ்சி ரூ.180க்கும், பூண்டு ரூ.350க்கும், பட்டாணி ரூ.230க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ள.












Click it and Unblock the Notifications