சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம்.. எப்படி பரபரப்பா இருந்த இடம்.. இப்போ ஆளே இல்லாம.. மனசே கலங்குது- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: எப்படி இருந்த சென்னை ஆம்னி பஸ் ஸ்டாண்ட், இப்போ இப்படியாகிப் போச்சே என்று பார்ப்போருக்கு கண்களில் கண்ணீரை வரவைக்கிறது கள நிலவரம்.

Recommended Video

    15 Seat தான் full ஆகுது | Koyambedu omni bus stand dull look | Oneindia Tamil

    ஆமாங்க.. தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினம் வந்தாலே, பட்டாசாக மாறி பரபரப்பா களைகட்டும் இடத்தில் ஒன்றுதான் ஆம்னி பஸ் ஸ்டாண்ட்.

     Chennai Koyambedu omni bus stand looks deserted without passengers

    பஸ்ல டிக்கெட் கிடைக்காது.., இருக்கும் டிக்கெட்டும் யானை விலை குதிரை விலை விற்கும். எந்த பஸ்சில் சீட் கிடைக்கும் என்று, பயணிகள் ஒவ்வொரு பஸ் ஜன்னலாக எட்டிப் பார்த்தபடி சுத்துவார்கள். இப்படியான காட்சிகளைத்தான் கண்டிருந்தது கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்.

    இந்தியா வந்தாச்சு ரஷ்ய கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் v.. அடுத்து கிளினிக்கல் டிரையல் ஆரம்பம்இந்தியா வந்தாச்சு ரஷ்ய கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் v.. அடுத்து கிளினிக்கல் டிரையல் ஆரம்பம்

    ஆனால், இந்த வருஷம் தீபாவளிக்கு, "யாராவது வாங்களேன்" என்று கூவிக் கூவி பஸ் ஓட்டுநர்கள் அழைத்துக் கொண்டு இருப்பதை பார்க்க, ஏனோ மனதில் வெறுமை.

     Chennai Koyambedu omni bus stand looks deserted without passengers

    பஸ்சில் பலரோடு பயணித்தால், கொரோனா பரவிவிடுமோ என்ற பயம்தான் பயணிகளை, பஸ் ஸ்டாண்ட் பக்கமே வரவிடாமல் விரட்டிவிட்டது என்கிறார்கள்.

    30 சீட் இருக்கும் ஒரு ஸ்லீப்பர் கோச் பஸ்சில், அரசு விதிமுறைப்படி 20 சீட்டுக்குத்தான் டிக்கெட் கொடுக்கிறார்கள். ஆனால் அதிலும் பத்தோ, பதினைந்தோதான் புக் ஆகிறதாம். ஆம்னி பஸ் ஸ்டாண்டுக்கே, நேரடியாக விசிட் அடித்தது, 'ஒன்இந்தியா'. அப்போதுதான் புயலுக்கு பிறகான அமைதி சூழ்நிலை போல ஆம்னி பஸ் நிலையம் மாறி இருப்பதை பார்த்து வியப்படைந்தோம்.

     Chennai Koyambedu omni bus stand looks deserted without passengers

    ஏசி பஸ்களில் பயணிப்போருக்கு போர்வை தருவதில்லை, நீங்களேதான் கொண்டு போகனும். மற்றபடி, பயணிகள் கைகளில் சானிட்டைசர் அடித்துவிட்டுதான் பஸ்சுக்குள்ளேயே ஏற்றுகிறார்கள். சில பஸ்கள், பயணிகளுக்கு உடல் வெப்ப நிலையை பரிசோதித்து பார்க்கிறது. சில பஸ் கம்பெனிகள், டிக்கெட் ரேட்டை குறைத்துள்ளன.

    ம்ஹூம்.. என்னதான் செய்தாலும், ஏழைகளின் வயிறு போல, வற்றி, காய்ந்து போய் கிடக்கிறது கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம். வீடியோவில் நீங்களே அதை பாருங்கள்.

    English summary
    Chennai Koyambedu omni bus stand is not filled with passengers despite Deepavali holiday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X