‛கோயம்பேடு டூ ரெட்ஹில்ஸ்’.. சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. ‛பவர்கட்’ இடங்களின் பட்டியல் இதோ
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோயம்பேடு, மைலாப்பூர், அரும்பாக்கம், வியாசர்பாடி, அம்பத்தூர், ஆவடி தரமணி, கிண்டி உள்பட பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
சென்னையில் ஏரியா வாரியாக மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணியின் காரணமாக தினமும் அறிவிக்கப்பட்ட மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் பல இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை முதல் மதியம் வரை 5 மணிநேரம் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் இன்று (11.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக வியாசர்பாடி, மைலாப்பூர், அரும்பாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், போரூர், வேளச்சேரி, தரமணி, கிண்டி, ஐடிசி, ரெட்ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
வியாசர்பாடி: மாத்தூர், 1வது பிரதான சாலை முதல் 3வது பிரதான சாலை, இந்தியன் வங்கி டிஎன்எச்பி லேக்விவ் குடியிருப்பு, ரிங் ரோடு, இண்டஸ்ட்ரியல் கார்டன், பொன்நகர் ரோஸ் நகர், மும்தாஜ் நகர், ஸ்ரீநிவாசா மாடர்ன் டவுன், பார்வதிபுரம் 1 முதல் 3வது பகுதி, அன்னை நகர், சாமுவேல் நகர், தனலட்சுமி நகர் 1 மற்றும் 2, மஞ்சம்பாக்கம், குலோப் ஸ்கூல், வெற்றி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
மைலாப்பூர்: காலேஜ் ரோடு, காலேஜ் லேன், நுங்கம்பாக்கம் ஹைரோடு, மேகனா குமாரமங்களம் தெரு, கேஎன்கே ரோடு, வால்லஸ் கார்டன் 1வது தெரு முதல் 3வது தெரு வரை, ரட்லண்ட் கேட் 1வது தெரு முதல் 6வது தெரு வரை, சுப்பாராவ் அவென்யு 1வது தெரு முதல் 3வத தெரு வரை, குமரப்பா தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அரும்பாக்கம்: சிஎம்ஆர்எல், கோயம்பேடு மார்க்கெட், சேமாத்தன் நகர் 3வது செக்டர் பகுதி, கோயம்பேடு, பூந்தமல்லி ஹைரோடு பகுதி, சீனிவாச நகர், தெற்கு மாட வீதி, வடக்கு மாட வீதி, மெட்டுகுளம், நியூ காலனி, ரேடியன்ஸ் பூந்தமல்லி ஹைரோடு உள்ளிட்ட மின்சாரம் தடைப்பட உள்ளது.
கேகே நகர்: வளசரவாக்கம், ஜானகி நகரின் ஒரு பகுதி, பிரகாசம் சாலையின் ஒரு பகுதி, சவுத்ரி நகரின் ஒரு பகுதி, மெஜஸ்டிக் காலனி, பெத்தான்யா நகரின் ஒரு பகுதி, அம்பேத்கர் தெரு, ராஜாஜி அவனெ்யு அனெக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்சேவை துண்டிக்கப்பட உள்ளது.
அம்பத்தூர்: திருவேற்காடு, கோலடி, வேலப்பன் சாவடி, மாதர்வேடு, கோ ஆப்ரேட்டிவ் நகர், நூம்பல் ரோடு, புளியம்பேடு ரோடு, ராஜாஸ் கார்டன், ஜெயலட்சுமி நகர், பிஎச் ரோடு, கேட்டுப்பாளையம், கண்ணம்பாளையம், ஆயில்சேரி, பாடி, கொரட்டூர், டிஎம்பி நகர், சர்ச் ரோடு, குபேர கணபதி தெரு, பாரதிதாசன் தெரு, சீராளம் தெரு, அண்ணா தெரு, டிஐ சைக்கிள், சோழாபுரம் மெயின் ரோடு, திருவேங்கட நகர், விவேக் நகர், நேரு நகர், இந்திரா நகர், கணபதி நகர், கிருஷ்ணாபுரம் விரிவாக்கம், மாந்தோப்பு பகுதி, நொளம்பூர், ஏரி ஸ்கீம், முகப்பேர் மேற்கு 5வது பிளாக் முதல் 8 வது பிளாக், கவிமணி சாலை, அடையாளம்பேட், வெள்ளாளர் தெரு, ஐஸ்வர்யம் பேஸ் 1, 2, குருசாமி, ஜெயின் சுந்தர்பன், அக்சயா ஹோம்ஸ், விஜிஎன் மான்ட், மினர்வா, எஸ்பி கார்டன் பகுதிகளில் மின்சாரம் தடைப்படுகிறது.
ஆவடி: ஆவடி மேற்கு, சிடிஎச் ரோடு, பட்டாலியன், முருகப்பா பாலிடெக்னிக், எச்விஎப் ரோடு, பிவி புரம், ஒசிஎப் ரோடு, ஆவடி செக் போஸ்ட், கஸ்தூரிபாய் நகர், காந்தி நகர், அலமாதி, திருமுல்லைவாயல், வேல் டெக் பிரதான சாலை, மோரை, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், ஸ்ரீநிவாசா நகர், சப்தகரி நகர், மோரை இண்டஸ்டரிஸ், பாண்டீஸ்வரம், வீராபுரம், கரப்பாக்கம், காவனூர், கேடிபி ரோடு, மேல் கொண்டையார், கதவூர், வெள்ளச்சேரி, திருமுல்லைவாய், சாந்திபுரம், சிடிஎச் ரோடு, மணிகண்டபுரம், கலைஞர் நகர், கீரின் பீல்ட், வெங்கடாசலம் நகர், கமம் நகர், ஒரகடம் சொசைட்டியில் மின்தடை ஏற்பட இருக்கிறது.
பல்லாவரம்: பெரியார் நகர், பால்சன் கம்பெனி, அண்ணா சாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, எம்ஜி ராதா தெரு, ரெட்டைமலை ஸ்ரீநிவாசன் தெரு, லூர்தூ மாதா தெரு, பீட்டர் தெரு, சபாபதி தெரு, நரசிம்மன் தெரு, அம்பேத்கர் தெரு, ஜெயமேரி தெரு, திரு நகர் பஜனை கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சேஷா லேன், கல்யாணிபுரம், கோதண்டன் நகர், தென்றல் நகர், செந்தமிழ் சாலை, விநாயகர் நகர், சர்வீஸ் ரோடு, ஸ்ரீநிவாசபுரம் லட்சுமி நகர், காயிதேமில்லத் நகர், சிலப்பதிகாரம் தெரு, மசூதி தெருவில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
போரூர்: மாங்காடு, மாங்காடு - குன்றத்தூர் ரோடு, துளசி தாஸ் நகர், எம்ஜிஆர் நகர், அம்மன் கோவில் தெரு, பூஞ்சோலை வீதி, தந்தை பெரியார் நகர், காமரஜ் நகர், மேட்டு தெரு, பஜார் தெரு, துபாஸ் தெரு, கோரிமேடு, கங்கை அம்மன் கோவில் தெரு, விஜயலட்சுமி நகர், சக்தி நகர் பிஎஸ்என்எல் ஆபீஸ், அட்கோ நகர், ஆவடி மெயின் ரோடு, தீயணைப்பு நிலையம், முருகபிள்ளை தெரு, கிரகலையா அபார்ட்மென்ட், ப்ரித்வி நகர், அய்யப்பன் தாங்கல், பரணிபுதூர், ஆர்ஆர் நகர், அனேக்ஸ், அய்யப்பன் தாங்கல் மெயின் ரோடு, சென்னீர் குப்பம், பரிவாக்கம், கண்ணப்பாளையம், பாரிவாக்கத்தின் ஒரு பகுதி, குப்பத்து மேடு, ஆயில்சேரி, மேட்டுபாளையம் சொரஞ்சேரியின் ஒரு பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வேளச்சேரி - கிண்டி: வேளச்சேரியை பொறுத்தவரை தரமணி, அதிபதி ஹாஸ்பிடல், சிடிஎஸ் பிளாட், கிரியாஸ்,தரமணி மெயின் ரோட, டாடா கன்ஷல்டன்சி, ராம்கிரி தெரு, பேபி நகர் பகுதி, சாஸ்திரி புரம், பார்க் அவென்யு, கிண்டி பகுதியை எடுத்து கொண்டால் எஜிஎஸ் காலனி, சக்தி நகர், பாலாஜி நகர் 1வது தெரு முதல் 15வது தெரு வரை, நேதாஜி காலனி 5வத தெரு முதல் 9 வது தெரு வரை, எஜிஎஸ் கானி, வேல் நகர், தாமரை தெரு, நவீன் பிளாட், நேதாஜி காலனி மெயின் ரோடு, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
ஐடிசி: சிப்காட் சிறுசேரி, எஸ்டிபிஐ, எம்ஜிஆர் நகர், எம்ஜி ரோடு, விஎஸ்ஐ எஸ்டேட், ஆர்எம்ஐ 1, ஸ்பாஸ்டிக் சொசைட்டி, டிடிடிஐ ஜெயந்தி, மேற்கு அவென்யு, தரமணி பேருந்து நிலையம், டபியுபிடி, ஆர்எம் ிசட் 2, பையோ டைசல், சிஎம்ஆர்எல் தரமணி பகுதி, கனகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர் பகுதி, எம்ஜிஆர் நகர், எஸ்ஆர்பி டூல்ஸ், வேளச்சேரி பகுதி, விஎஸ்ஐ எஸ்டேட் பேஸ் - 1, 100 அடி சாலை, அண்ணா நகர், சிஎஸ்ஐார் ரோடு, சிபிடி பகுதி, அசன்டாஸ், டைடல்பார்க், காந்தி நகர், அடையார் பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது.
ரெட்ஹில்ஸ்: பாலவயல், சோத்துப்பாக்கம் ரோடு, மணிஷ் நகர், குமரன் நகர், ஸ்ரீராம் நகர், செந்தில்வேலன் நகர், கும்மனூர், பெருங்காவூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications