சென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்! பரபரப்பு
சென்னை: மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்தவரை சென்னை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.
சென்னை நெற்குன்றம் பெருமாள் கோயில் 2வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ஆதியம்மாள் (65). இவரது கணவர் ஆறுமுகம் இறந்துவிட்டார். தம்பதிக்கு 2 மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் மகேஷ்குமார் (38), மதுரை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.

மகேஷ்குமாரின் மனைவி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். தற்போது, நெற்குன்றத்தில் தனது 2 குழந்தைகளுடன் வீட்டின் கீழ்தளத்தில் மகேஷ்குமார் வசித்து வருகிறார்.
வீட்டின் மாடியில் அவரது தாயார் ஆதியம்மாள் வசித்து வந்தார். மகேஷ்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மது அருந்த ஆதியம்மாளிடம் பணம் கேட்டு நச்சரித்தள்ளார். அப்போது, ஆதியம்மாள் சத்தம் போட்டுள்ளார். இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மகேஷ்குமார் அருகில் கிடந்த இரும்பு ராடால் தாயை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
இதில் ஆதியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், மகேஷ்குமார் கீழ்தளத்துக்கு சென்று, தூங்கி இருக்கிறார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் ஆதியம்மாள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் முதல் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து மகேஷ் குமாரை கைது செய்தனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications