சென்னையில் பரபரப்பு! விமானம் தரையிறங்கும் நேரத்தில்.. பைலட் கண்ணில் பாய்ந்த "லேசர்" ஒளி.. என்னாச்சு?
சென்னை: சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் பைலட் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நேற்று அதிகாலை இண்டிகோ விமானம் தரையிறங்கியது. கொழும்பில் இருந்து 153 பயணிகளுடன் வந்த அந்த விமானம், அதிகாலை சென்னையில் தரையிறங்கியது.
இந்த நிலையில் விமானம் தரையிறங்கிய அந்த நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமானம்
விமானம் வேகமாக தரையிறங்கிய நேரம் பார்த்து பைலட் இருக்கும் காக் பிட்டை நோக்கி லேசர் ஒளி பாய்ச்சப்பட்டு இருக்கிறது. சரியாக பைலட் இருக்கும் பகுதியை நோக்கி அவரின் கண்களில் அடிக்கும் விதமாக இந்த ஒளி பாய்ச்சப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த லேசர் ஒளி அதிக ஆற்றலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு பைலட்டுகளையும் நோக்கி இந்த ஒளி அடிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பைலட்
ஆனால் பைலட்டுகளை இந்த ஒளி பெரிதாக பாதிக்கவில்லை. அவர்கள் இந்த ஒளி காரணமாக லேசாக கவனம் சிதறியதாக கூறப்படுகிறது. ஆனால் இதனால் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. விமானிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் கவனமாக விமானத்தை தரையிறக்கி உள்ளனர். விமானம் இதனால் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

காவல்நிலையம்
இந்த நிலையில் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விமான நிலைய அதிகாரிகள் மூலம் கண்ட்ரோல் ரூம் அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனே விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி பழவந்தாங்கல் ஏரியாவில் இருந்து இந்த லேசர் ஒளி வந்து இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் இருந்து இந்த ஒளி வந்துள்ளது.

இண்டிகோ விமானம்
இண்டிகோ விமான நிலைய அதிகாரிகள் மூலம் ஏர்போர்ட் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் 5 வருடங்களுக்கு முன் இதேபோல் சம்பவம் நடைபெற்றது. அப்போது இரண்டு பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்திலும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications