பிரபுதேவா தம்பி மாதிரியே ஏமாந்த நடிகர் டேனி.. சென்னையில் லீசுக்கு வீடு எடுப்போருக்கு அலார்ட்
சென்னை: நடிகர் பிரபுதேவா தம்பி நகேந்திர பிரசாத் வீட்டை லீசுக்கு எடுத்து வாடகைக்கு விட்டு பணம் தருவதாக ஒரு தனியார் நிறுவனம் 25 லட்சம் ஏமாற்றியது. அதே பாணியில் நடிகர் டேனியையும் லீசுக்கு வீடு பிடித்து தந்து 17 லட்சம் மோசடி செய்துள்ளது இன்னொரு தனியார் நிறுவனம். பிரபலங்கள் ஏமாந்தது எப்படி என்பதை பார்ப்போம்..
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களிலும், பிக் பாஸ் என்ற தனியார் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகர் டேனி. இவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வசித்து வந்த நிலையில் டேனியல் லீசுக்கு சென்னையில் வீடு தேடி உள்ளார்..

நோ புரோக்கர் இணையதளத்தில் அவர் வீடு தேடிய போது, எஸ்.டி.எஸ்.கே என்ற தனியார் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.அப்போது அந்த நிறுவனத்திடம், 17 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அதன் மூலம் வீட்டின் உரிமையாளருக்கு மாதம் தோறும் வாடகை செலுத்தப்படும் என்று கூறியுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகை திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கையாக தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நடிகர் டேனியல் சென்னை போரூரில் வீடு ஒன்றை ஒப்பந்தம் செய்து குடியேறி உள்ளார்.
இந்த நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டிற்க்கு அந்த நிறுவனம் மூன்று மாதங்கள் வாடகை செலுத்தாததால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் டேனியலிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகர் டேனி, தன்னிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட எஸ்.டி.எஸ்.கே தனியார் நிறுவன ஏமாற்றியதாக சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சென்னை குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக வீடியோவில் பேசியுள்ள டேனி, நோ புரோக்கர்.காமில் வீடு லீசுக்கு தேடிய போது, எஸ்.டி.எஸ்.கே என்ற தனியார் நிறுவனம் என்னை தொடர்பு கொண்டு பேசிய லீசுக்கு வீடு எடுத்து தருவதாக கூறியது. அந்த நிறுவனம் அரசிடம் பதிவு பெற்றது என்றும், பிரபலங்களுக்கு வீடு எடுத்து தருவதாகவும் பேசி லீசுக்கு வீடு எடுத்து தந்தது. ஆனால் வீடு எடுத்து கொடுத்த உடனே, ஓனர் ஒப்புக்கொள்ளவில்லை.. நாங்களே வாடகை கட்டுகிறோம் என்று சொல்லி, வாடகை சில மாதம் கட்டினார்கள்.. ஆனால் 3 மாதத்திற்கு பிறகே மோசடி செய்து ஓடிவிட்டார்கள். விசாரித்த போது தான், இப்படி லீசுக்கு வீடு தேடுவோரை ஏமாற்றுகிறார்கள் என்பது தெரியவந்தது என்றார்..
முன்னதாக பிரபுதேவா தம்பி நடிகர் நாகேந்திர பிரசாத்தும் இதே பாணியில் ஏமாற்றப்பட்டார். விக்னேஷ் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடிகர் நாகேந்திர பிரசாத்திடம் வீடு வாடகைக்குக் கேட்டிருக்கிறார். அப்போது நாகேந்திர பிரசாத் இந்த வீட்டினை கேர் டேக்கர் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு லீசுக்கு விட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தில் நீங்கள் ரூபாய் 25 லட்ச லீசுக்கு பணம் செலுத்து என்றும், அதன் பிறகு அந்த நிறுவனத்திடம் இருந்து தாங்கள் மாதம், மாதம் 36 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொள்வதாகவும் கூறினாராம்.
இதையடுத்து விக்னேஷ் இந்த வீட்டை லீசுக்கு எடுப்பதற்கு 25 லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்திற்குச் செலுத்தி உள்ளார்.. அந்த நிறுவனமானது திடீரென கடந்த ஒரு வருடமாக நடிகர் நாகேந்திர பிரசாத்திற்குப் பணத்தைத் தராமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளது.
வீட்டிற்கான வாடகை பணம் வராததால் அதிர்ச்சி அடைந்த நாகேந்திர பிரசாத், அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த விக்னேஷை உடனடியாக காலி செய்யும்படி கூறியுள்ளளார். ஆனால் விக்னேஷ் நாங்கள் 25 லட்சம் பணத்தைச் செலுத்தி உள்ளோம், என வீட்டை காலி செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். இதையடுத்து, நாகேந்திர பிரசாத் தனது நண்பர்களை அழைத்து வந்து விக்னேஷ் குடும்பத்தாரை வெளியே அனுப்பி விட்டு வீட்டைப் பூட்டி கிரில் கேட்டில் வெல்டிங் வைத்திருக்கிறார்.
இதனால் கடந்த நவம்பர் 7ம் தேதி ஒரு நாள் முழுவதும் விக்னேஷ் குடும்பத்துடன் வீடு இல்லாமல் வெளியே இருந்திருக்கிறார் இது குறித்து, விக்னேஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டின் கிரில் கேட்டை நாகேந்திர பிரசாத் முன்னிலையில் போலீசார் உடைத்து விக்னேஷை வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்கள். தான் செலுத்திய ரூபாய் 25 லட்சம் லீஸ் தொகையைத் திருப்பி கொடுத்து விட்டால் தான் இந்த வீட்டை காலி செய்து விட்டுச் சென்று விடுவதாக விக்னேஷ் போலீசாரிடம் தெரிவித்தார்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கேர் டேக்கர் என்ற நிறுவனத்திற்கு லீசுக்கு விட்டுள்ளளார் பிரபு தேவா தம்பி நாகேந்திர பிரசாத். அந்த நிறுவனம் விக்னேசுக்கு லீசுக்கு விட்டு 25 லட்சத்தை வாங்கி உள்ளது.. அவர்கள் நாகேந்திர பிரசாத்திற்கு பணத்தை தாராமல் ஏமாற்றிவிட்டதால் லீசுக்கு வந்த விக்னேசும் அவதிப்படுகிறார். லீசுக்கு விட்ட நாகேந்திர பிரசாத்தும் அவதிப்படுகிறார்.
இதை அப்படியே மாற்றிப்போட்டால் நடிகர் டேனி ஏமாந்தது தெரியும். லீசுக்கு வீடு எடுத்து தருவதாக பணத்தை வாங்கி வாங்கிய எஸ்.டி.எஸ்.கே என்ற தனியார் நிறுவனம், சில மாதம் வாடகையை கட்டி விட்டு, பின்னாளில் எஸ்கேப் ஆகி உள்ளது. இதில் முழுமையாக டேனியல் ஏமாற்றப்பட்டுள்ளார். பிரபலங்களை குறிவைத்து லீசு வீடுகளின் பெயரில் ஏமாற்றுவது நடக்கிறது.
இதுபோன்று ஏமாறுவதை தடுக்க லீசுக்கு போகிறவர்கள் லீசுக்கு விடும் வீடு அவர்களுடையது தானா என்பதை அறிந்து செல்ல வேண்டும். மின்சாரம் யார் பெயரில் இருக்கிறதோ அவர் தான் வீட்டின் உரிமையாளர். அதை வைத்து கண்டுபிடித்து ஒப்பந்தம் போட வேண்டும். மேலும் நேரடியாக வீட்டின் உரிமையாளரிடம் மட்டுமே ஒப்பந்தம் போடுவது இந்த சிக்கல்கள் வராமல் தடுக்கும். அதேபோல் லீசுக்கு விட விரும்புபவர்கள் நேரடியாக யார் குடியிருக்கிறார்களோ அவர்களுக்கு லீசுக்கு விட வேண்டும். லீசுக்கு விட்ட வீட்டை மறு லீசுக்கு விடுவது, வாடகைக்கு விடுவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது என்று ஒப்பந்தம் போட வேண்டும். இந்த ஒப்பந்தத்தை பத்திர ஆபிஸில் பதிவு செய்வதும் கட்டாயம் ஆகும். அப்போது தான் ஏமாறுவது தடுக்கப்படும்..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications