Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் கடல் பாலமா.. செம பிளான்ங்க! லைட் ஹவுஸ் டூ கொட்டிவாக்கம் ரூட்.. களமிறங்கும் தமிழக அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை வரை 9.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை கடல் மீது மேம்பாலம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேம்பாலம் அமைப்பது, சாலை விரிவாக்கம் என பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்து வருகிறது.

Chennai Lighthouse Tamil Nadu Govt

கடல் மீது மேம்பாலம்: அந்த வகையில், சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து கொட்டிவாக்கம் வரையில் கடல் வழியாக பாலம் அமைப்பது குறித்து சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை வரை உள்ள 9.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட சாலை அமைக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டங்களில் ஒன்றாகும்.

மீனவர்கள் எதிர்ப்பு: கடந்த 2007 ஆம் ஆண்டு இதற்கான திட்டம் வகுக்கபட்டது. கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகர் வரை முதல் கட்டமாகவும் , 2-வது கட்டமாக பெசன்ட் நகர் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரையும் உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடபட்டு இருந்தது. ஆனால், இந்த உயர் மட்ட சாலை அமைக்கப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொட்டிவாக்கம் வரை: இதனால், இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்தலாமா என்பது குறித்து தமிழக அரசு யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய திட்டத்தை விட சற்று மாறுதலாக சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து கொட்டிவாக்கம் வரை கடல் மீது மேம்பாலம் அமைக்க தமிழக பரிசீலித்து வருகிறதாம்..

விரைந்து செல்ல முடியும்: கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எவ வேலு ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடல் மீது மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாம்... இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "இந்த மேம்பாலம் கட்டப்பட்டால் சென்னை மெரினா பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரைக்கு விரைவாக செல்ல முடியும்.

இதனால், போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும். லைட் ஹவுஸ் டூ கொட்டிவாக்கம் இடையேயான கடல் மீது மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.எனினும் ஆரம்ப நிலையே " என்றனர்.

உதயநிதி ஸ்டாலின் ஆய்வு: முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், "தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழித்தட உயர்மட்டச் சாலை, ராஜிவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளை இணைக்கும் இணைப்புச் சாலை, ராஜிவ் காந்தி சாலையில் டைடல் பூங்கா சந்திப்பில் நடைபெறும் 'யு' வடிவ மேம்பாலப் பணி, தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை, மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலப் பணிகளின் தற்போதைய நிலை என்ன என்பதும் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனிடையே, கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலினை குறைக்கும் வகையில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறு வழித்தடமாக அகலப்படுத்தும் பணி 8.80 கிலோ மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+