சென்னை மக்களே இன்று 39 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!.. எந்த ட்ரெயின் செக் பண்ணுங்க
சென்னை: சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் இன்று (ஜூன் 24) நடைபெறவுள்ளது. இதனால், இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் 39 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிரதானப் பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். சென்னையில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில், ஐடி துறை என பல்வேறு தேவைகளுக்காக அண்டை மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வசித்து வருகின்றனர். சென்னை மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் இருந்து வருகின்றன.

சென்னை பயணிகளுக்கு புறநகர் மின்சார ரயில் சேவைகள் என்பது பெரும் வரப்பிரசாதமாகும். சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மின்சார ரயில் சேவை மட்டும் இல்லையென்றால் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்துக்கு சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது.
இந்த ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் 39 புறநகா் மின்சார ரயில்கள் ஜூன் 24 (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9.15 முதல் பிற்பகல் 3.15 வரை நடைபெறவுள்ளன.
இதன் காரணமாக, பணிகள் நடைபெறும் நேரங்களில் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயங்கும் அனைத்து புறநகா் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சூலூா் பேட்டை - நெல்லூா், சென்ட்ரல் - சூலூா்பேட்டை உள்பட மொத்தம் 39 புறநகா் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்நாளில் காலை 6.50 முதல் மாலை 5.12 மணி வரை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையில் இருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications