ஒரே நாளில் 3வது முறை உல்லாசம்.. லாட்ஜில் காதலனை அடித்தே கொன்ற காதலி.. பரபர வாக்குமூலம்

சென்னை பெரம்பூர் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் புதிய திருப்பமாக உல்லாசத்துக்கு அழைத்து தொல்லை கொடுத்த காதலனை,காதலியே கீழே தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரம்பூர் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் புதிய திருப்பமாக உல்லாசத்துக்கு அழைத்து தொல்லை காதலனை,காதலியே கீழே தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. லாட்ஜில் தங்கியிருந்த போது ஒரே நாளில் 3வது முறையாக என்னை உல்லாசத்துக்கு அழைத்து தொல்லை தந்ததால் கொன்றதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார் காதலி.

சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2-வது தெருவைச் சேர்ந்த 41 வயதாகும் பிரகாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். பிரகாஷ்க்கு, கொசப்பேட்டை சின்னதம்பி தெருவைச் சேர்ந்த பிரியா (42) என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

பிரகாசும், பிரியாவும் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தனியாக லாட்ஜில் அறை எடுத்து தங்கி ஜாலியாக இருப்பார்களாம். அதுபோல கடந்த 8ம் தேதி இருவரும் சென்னை பெரியமேடு ஆர்.எம்.சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர். அங்கு அறையில் பிரகாஷ் திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக பிரியா, விடுதி மேலாளர் கபீருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தகவல் அறிந்த கபீர், அந்த அறைக்குச் சென்று பார்த்தார். அப்போது அங்கு பிரகாஷ் இறந்து கிடந்துள்ளார். உடனே அவர், பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

விசாரணை

விசாரணை

தகவல் அறிந்த பெரியமேடு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரகாஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பிரியாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பிரியா போலீசாரிடம் கூறும் போது, தானும், பிரகாசும் கள்ளக்காதலில் ஈடுபடுவது வெளியில் தெரிந்துவிட்டது.

கதறி அழுதார்

கதறி அழுதார்

எனவே லாட்ஜில் அறை எடுத்து தங்கி, உல்லாசம் அனுபவித்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தோம். அதன்படி உல்லாசம் அனுபவித்துவிட்டு, லாட்ஜ் அறை மின்விசிறியில் தனதுசேலையால் இருவரும் தூக்கு போட்டோம். பிரகாஷ் கழுத்து இறுகி இறந்து விட்டதாகவும், தான் தூக்கில் தொங்கமுடியவில்லை என்றும் பிரியா கதறி அழுதபடி கூறியிருக்கிறார். இதனிடையே பிரியா தப்பி ஓடாமல், லாட்ஜ் மேலாளர் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால், போலீசாரும் முதலில் அவர் கூறியது உண்மையாக இருக்கலாம் என்றே நம்பினார்கள்.

சந்தேகம்

சந்தேகம்

ஆனால் தடய அறிவியல் அதிகாரிகள் சோதனை செய்தது பிரியாவின் வாக்குமூலத்தின் படியான காட்சிகள் இல்லை. ஏனெனில் தூக்குப்போட்ட மின்விசிறிக்கும், படுக்கைக்கும் உள்ள இடைவெளி தூரம் தூக்குப்போடும் அளவுக்கு இல்லை . அவரால் தூக்கு போட்டிருக்க முடியாது என்று தடயவியல் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பிரியா மீது சந்தேகமடைந்தனர். இதனால் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.

சிக்கிய பிரியா

சிக்கிய பிரியா

அதற்குள் பிரகாஷின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியானது. அந்த அறிக்கையில், பிரகாசின் பின்பக்க தலையில் பலத்த அடிபட்டு, உள்காயம் ஏற்பட்டு இறந்தார் என்றே வந்தது. இதையடுத்து பிரியாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், பிரகாசை கீழே தள்ளி கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். பிரியா கொலை குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

பகலில் ஒரு அறை

பகலில் ஒரு அறை

"நான் எனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். அயனாவரத்தில் உள்ள அப்பள கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். பிரகாசுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கணவன்-மனைவிபோல வாழ ஆரம்பித்தோம். மாதம் 2 அல்லது மூன்று முறை ஏதாவது ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி ஜாலியாக இருப்போம். நாங்கள் இருவரும் மது அருந்துவோம். பகலில் மட்டும் அறையில் தங்கி உல்லாசம் அனுபவிப்போம்.

அடித்தார்

அடித்தார்

அதுபோல் தான் 8ம் தேதி பகல் 11 மணிக்கு அறை எடுத்து தங்கி, மாலை வரை 2 முறை சந்தோஷமாக இருந்தோம். 4 குவார்ட்டர் பாட்டில் சரக்கு அருந்தினோம். நன்றாக பிரியாணி வாங்கி சாப்பிட்டோம். இரவு 8 மணியளவில் அறையை காலிசெய்துவிட்டு போகலாம் என்று சொன்னேன். ஆனால் வழக்கத்துக்கு மாறாக பிரகாஷ் 3வது முறையாக உல்லாசத்துக்கு கூப்பிட்டார். இதில் எனக்கு விருப்பமில்லை. எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர் எனது தலை முடியை பிடித்து அடித்தார். அடி தாங்காமல் அவரை பலம் கொண்டு அடித்து கீழே தள்ளிவிட்டேன்.. அவர் பின்புறமாக சரிந்து விழுந்தார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

அதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மூச்சு பேச்சின்றி மயங்கிக் கிடந்தார். உடனே மருத்துவமனையில் சேர்ப்பதற்காக லாட்ஜ் மேலாளரை கூப்பிட்டேன். நான் அவரை கொலைசெய்ய நினைத்து கீழே தள்ளவில்லை. போலீசார் வந்து பார்த்தபிறகு தான் பிரகாஷ் இறந்தது எனக்கு தெரியும். என்னை அடித்ததால தெரியாமல் தள்ளிவிட்டேன். அவர் இறந்து போனார். இதனால் தற்கொலை நாடகம் நடத்தி கொலை பழியில் இருந்துதப்ப நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை " இவ்வாறு பிரியா வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, பிரியா மீது கொலைக்கு இணையான இ.பி.கோ.34-ஏ- (1) என்ற சட்டப்பிரிவின் கீழ், சாவுக்கு காரணமாக இருந்ததாக பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் பிரியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+