சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இனி டிராபிக் நெரிசலே இருக்காது.. புதிய எல் வடிவ பாலம் திறக்கப்பட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றான மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய எல் வடிவ பாலத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ரூ.68 கோடி செலவில் சர்தார் படேல் சாலையை ராஜீவ் காந்தி சாலையுடன் இணைக்கும் வகையில் எல் வடிவத்தில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாக ஆளுநர் மாளிகையில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் சாலை உள்ளது. கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய கைலாஷ் சந்திப்பில் தொடங்கி நாவலூர் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

Chennai Madhya Kailash L Shaped Flyover Open by CM MK Stalin Major Relief to Traffic Congestion

எல் வடிவ மேம்பாலம்

அதேபோல, வணிக நிறுவனங்களும் உள்ளன. இதனால், இந்த பகுதி எப்போதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக இருக்கும். பீக் நேரத்தில் சிக்னல்களை தாண்டுவதற்கு மட்டுமே மணிக்கணக்கில் காத்துகிடக்க வேண்டியிருக்கும். வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து செல்வதற்குள் சிக்னல்கள் இரண்டு முறை மூன்று வரை விழுந்து விடும்.

அந்த அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் மத்திய கைலாஷ் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேம்பாலம் கட்ட முடிவு செய்யபட்டது. சர்தார் படேல் சாலையை ராஜீவ் காந்தி சாலையுடன் இணைக்கும் வகையில் எல் வடிவத்தில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.68.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணிகள் தற்போது முடிவு பெற்றுள்ளதால் இன்று சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த ஸ்டாலின், தொடர்ந்து மேம்பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த மக்களை நோக்கி கையசைத்தார்.

இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளதால், ஐஐடி மெட்ராஸ் - அடையார் புற்று நோய் மருத்துவமனை வரையில் உள்ள சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது.

இந்தப் பாலம் இருவழித்தடத்தில் வாகனத்தில் செல்லும் அளவிற்கு அகலமானதாகவும், ஒருவழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பாலத்தின் மொத்த நீளம் 652 மீட்டர் ஆகும் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ்காந்தி சாலைக்குப் பிரிந்து செல்லும் இடத்தில் பாலம் வளைவாக அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் குறையும்

இந்த மேம்பாலம் 650 மீட்டர் நீளம், 9.5 மீட்டர் அகலம் கொண்டதாகும். ஐஐடி மார்க்கத்தில் இருந்து ஒ எம்.ஆர் செல்லக்கூடியவர்கள் மட்டுமே இந்த மேம்பாலத்தை பயன்படுத்த முடியும். எதிர்திசையில் இந்த மேம்பாலத்தில் பயணிக்க முடியாது. அதாவது, ஒஎம்.ஆர். சாலையில் இருந்து கிண்டி நோக்கி பயணிப்பவர்கள் மேம்பாலத்தை பயன்படுத்த முடியாது. ஏற்கனவே உள்ள பழைய சாலையில் பாலத்தின் கீழ்தான் பயணிக்க வேண்டியிருக்கும்.

அதே நேரத்தில் ஒஎம்.ஆர் சாலையில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு, திருவாண்மியூர் செல்ல வேண்டும் என்றால் மேம்பாலத்திற்கு கீழாகவே ஒரு யூடர்ன் உள்ளது. அவற்றின் வழியாக அடையாறு, திருவான்மியூர் பகுதிக்கு செல்ல முடியும். முதல்வர் ஸ்டாலினால் இன்று திறந்து வைக்கப்பட்டு இருக்கும் இந்த மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கைலாஷ் பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவு பெற்று திறக்கப்பட்டு உள்ளது. பாலம்கட்டுமான பணிகளால் அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு வெகுவாக குறையும் என்பதால் வாகன ஓட்டிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+