Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரவாயலில்.. அந்த "நடிகை" யாருங்க? பாவம் ஈரோடு பொண்ணு.. டைரக்டர் சார் செய்த வேலையை பாருங்க.. ஆண்டவா

Subscribe to Oneindia Tamil

சென்னையில் "இடி".. யாரிந்த நடிகை? மதுரவாயலில் அலறிய பெண்.. டைரக்டர் யார்னு பாருங்க? சார் இப்ப புழலில்

சமீபத்தில் சென்னை வளசரவாக்கத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. அன்பு நகரில் உள்ளது அந்த அபார்ட்மென்ட்.. இங்கிருக்கும் ஒரு வீட்டுக்கு, அறிமுகம் இல்லாதவர்கள் அடிக்கடி வந்து செல்வதை அந்த பகுதி மக்கள் கவனித்துள்ளனர்.. அதனால், விபசார தடுப்பு பிரிவுக்கு புகார் தரவும், போலீசாரும் அந்த அப்பார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தனர்.

Chennai Maduravoyal and Who is this supporting actress, what did police say about Director Ajithkumar

அப்போது நிறைய சினிமா நடிகைகளை வைத்து, அந்த வீட்டில் விபச்சாரம் நடத்தப்பட்டு வருவது தெரியவந்தது. படவாய்ப்பு இல்லாததால், இந்த நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களாம். அதுமட்டுமல்ல, இவர்களை இப்படி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும், ஒரு பிரபல துணை நடிகைதான் என்பதும் தெரியவந்தது.. அவர் பெயர் வைதேகி.. 50 வயதாகிறது.

சினிமா மார்க்கெட்: சினிமாவில் மார்க்கெட் இல்லை என்பதால், தன்னை போலவே இருக்கும் மற்ற சினிமா நடிகைகளை வைத்து, இந்த பாலியல் தொழிலை கடந்த 6 வருடங்களாக செய்துவருகிறார். முன்னணி நடிகைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 ஆயிரம், துணை நடிகைகளுக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும்... முன்னணி நடிகை தான் வேண்டும் என்றால், ஒரு நாளுக்கு முன்பேயே ரிசர்வ் செய்ய வேண்டும் என்ற கண்டிஷன்களும் விபச்சாரம் நடந்து வந்துள்ளது.. இறுதியில், அந்த துணை நடிகையை போலீசார் கைது செய்தனர்.

சினிமாவில் சான்ஸ் கிடைக்காததால், நெருக்கும் குடும்ப சூழலை காரணம் காட்டியே பெரும்பாலான பெண்கள், இப்படியான ஆபத்தில் சிக்கி கொள்வது சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. எனினும், சினிமா மோகத்தில், தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் அப்பாவி பெண்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே வருகிறது.

துணை நடிகை: இதோ இதே போல, ஒரு பெண் இதே சென்னையின் மதுரவாயலில் கதறி கொண்டிருக்கிறார்.. இதே ஒரு போல ஒரு துணை நடிகைதான், இந்த துயர சம்பவத்துக்கும் காரணமாகி உள்ளார்.. யார் அவர்?

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்தவர் அஜித்குமார்.. இவருக்கு 25 வயதாகிறது.. நிறைய படங்களுக்கு உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.. இப்போது, "மது பிளஸ் 2" என்ற படத்தை டைரக்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, சென்னையில் தன்னுடைய நண்பர்களுடன் தங்கியுள்ளார். அஜித்குமாருக்கு துணை நடிகை ஒருவர் மூலமாக, 20 வயது என்ஜினியரிங் மாணவி அறிமுகமாகியிருக்கிறார். இந்த கல்லூரி மாணவிக்கு 20 வயதாகிறது.. ஈரோட்டை சேர்ந்தவர்..

மதுரவாயல்: ஒருநாள், அந்த மாணவி பாஸ்போர்ட் அலுவலகம் செல்வதற்காக, தன்னுடைய நண்பருடன் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்திருக்கிறார்.. துணை நடிகை மூலம் அஜித்குமார் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தால், அவரது வீட்டில் தங்க மாணவி முடிவு செய்துள்ளார். அதனால், கடந்த 21ம் தேதி மாணவியை, மதுரவாயலிலுள்ள அஜித்குமார் வீட்டில் இறக்கிவிட்ட நண்பர், ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் வந்து, அழைத்துக்கொள்வதாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அதனால், மாணவியும் அஜித்குமார் வீட்டிலேயே தங்கினார். சம்பவத்தன்று 2 பேருமே ஒன்றாக சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. இதற்கு பிறகு, பாலியல் ரீதியாக மாணவியிடம் அணுகியிருக்கிறார் அஜித்குமார்.. இதற்கு மாணவி மறுக்கவும், இப்போது டைரக்டட் செய்து கொண்டிருக்கும் படத்தில் சான்ஸ் வாங்கி வருவதாக ஆசை வார்த்தை சொல்லியதுடன், 2 முறை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். இதற்கு பிறகு, அந்த வீட்டிலிருந்து தப்பித்துச் செல்ல மாணவி முயன்றிருக்கிறார்.

எச்சரிக்கை மெசேஜ்: ஆனால், அவரை வீட்டிற்குள்ளே வைத்து, கதவை வெளிப்பக்கம் பூட்டிவிட்டு அஜித்குமார் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த மாணவி, ஈரோட்டிலுள்ள தனது சொந்தக்காரர்களுக்கு "எச்சரிக்கை மெசேஜ்" அனுப்பியுள்ளார்..

Chennai Maduravoyal and Who is this supporting actress, what did police say about Director Ajithkumar

இதைப்பார்த்து பதறிப்போன உறவினர்கள், ஆலப்பாக்கம் போலீசாருக்கு விஷயத்தை சொல்லவும், உடனடியாக அஜித்குமார் வீட்டுக்கு விரைந்தனர். வீட்டிற்குள் சிறைவைக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. மாணவி அளித்த புகாரின்பேரில், அஜித்குமாரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.. இப்போது இந்த டைரக்டர் புழலில் உள்ளார்.

அட்வைஸ்: ஆனால், அந்த துணை நடிகை அஜித்குமாரிடம், எதற்காக இந்த மாணவியை அறிமுகப்படுத்தினார்? யதேச்சையாக, நல்லெண்ணத்துடன்தான் அறிமுகப்படுத்தி வைத்தாரா? என்று தெரியவில்லை.. சினிமாவில் வாய்ப்பு தருவதாக சொல்லி, பாலியல் அட்டகாசங்கள் இப்படி நாளுக்கு நாள் பெருகி வருவதால்தான், இதுபோன்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அட்வைஸ் செய்துகொண்டேயிருக்கிறார்கள்.. ஆனாலும், ஆசை யாரை விட்டது??? என்று தணியும் இந்த சினிமா மோகம்???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+