மதுரவாயலில் "தொக்கா" சிக்கிய புள்ளி.. அள்ள அள்ள பணம்.. அதென்ன பக்கத்துல? மலைத்து நின்ற சென்னை போலீஸ்
சென்னை: மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தியதில், ரூ.8.5 லட்சம் சிக்கிய தகவல் பெரும் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
விரைவில் தேர்தல் நடக்க போகிறது.. பிரச்சாரங்களும் சூடுபிடித்து வருகின்றன.. தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்படுகிறது.

ஏசி சண்முகம்: அந்தவகையில் சென்னையிலும் அதிரடி சோதனைகளை நடத்தினார்கள்.. பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது கட்சியை சேர்ந்தவர் வினோத்.. புதிய நீதி கட்சியின் வணிகர் அணி தலைவர் ஆவார்.. இவர் வேலூரில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மதுரவாயலில் உள்ள வினோத் வீட்டில், வாக்காளர்களுக்கு வழங்க பணம் வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.. இதையடுத்து, மதுரவாயலில் உள்ள வினோத்தின் வீட்டுக்கு, நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல, வினோத்தின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது..
சோதனை: ஆனால், அங்கு வினோத் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தக்கூடாது என்று கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, புதிய நீதிக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், பாஜக தரப்பினரும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் போலீசாருக்கு சென்றதையடுத்து, அவர்கள் விரைந்துவந்து, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்..
விசாரணை: இறுதியில், வினோத் வீட்டில் சுமார் 5 மணி நேரத்துக்குமேல் அதிரடி சோதனை நடந்தது.. அப்போது மொத்தம் ரூ.8.5 லட்சம் பணம் சோதனையில் பிடிபட்டுள்ளது. இதைத்தவிர, 60 வேட்டிகள், 60 சேலைகள், மணிபர்ஸ் போன்ற பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்ற பணத்துக்கு உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு, திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறிவிட்டு சென்றார்கள். அத்துடன், அவை அனைத்தும் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் புதிய நீதிக்கட்சி நிர்வாகி வீட்டில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications