சென்னை மக்களே.. இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! வரும் ஞாயிற்றுக்கிழமை ரயில் அட்டவணையே மாறுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதற்குப் பதிலாக 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மின்சார ரயில்களை பயன்படுத்தும் பயணிகள், அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது ரயில்வே நிர்வாகம்.

சென்னை சென்டிரல்- அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரெயில்வே பணிமனையில் வருகிற 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 3.40 மணி வரை (8 மணி நேரம் 40 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Chennai train railway

ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40, 6.10, 9.55, மதியம் 1.05 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு திருத்தணி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரலில் இருந்து காலை 6.50, 7.45, 8.05, 8.40, 9.15, 9.35, 10.40, 11.30 மதியம் 12, 1, 1.50, 2.40 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்களும், திருவள்ளூரில் இருந்து காலை 6.50, 7.30, 8.10, 8.20, 8.30, 9.10, 9.25, 10.05, 11.30 மதியம் 1.05, 2.40, 3.05 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரல்

சென்டிரல் நிலையத்தில் இருந்து காலை 9.55, 11.45 மதியம் 2.15 ஆகிய நேரங்களில் திருத்தணி செல்லும் மின்சார ரயில்களும், மதியம் 12.40, 1.25 ஆகிய நேரங்களில் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களும், காலை 10.30 மணிக்கு கடம்பத்தூர் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணத்தில் இருந்து காலை 6.40, 7.10, 11.15, மதியம் 12, 1.40 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரயிலும், திருநின்றவூரில் இருந்து காலை 7.55 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரயிலும், திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

49 மின்சார ரயில்கள்

எண்ணூரில் இருந்து காலை 6.35 மணிக்கு திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், திருவள்ளூரில் இருந்து மதியம் 12 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயிலும், திருவள்ளூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயிலும், ஆவடியில் இருந்து காலை 5 மணிக்கு எண்ணூர் வரும் மின்சார ரயிலும் என மொத்தம் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை மற்றும் சென்டிரலில் இருந்து ஆவடி மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரெயில்கள் இருமார்க்கமாகவும் வழக்கமான அட்டவணையின்படி இயங்கும்.

வருகிற 23 ஆம் தேதி மதியம் 12.10 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் பட்டாபிராம்- திருவள்ளூர் இடையேயான மின்சார ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

17 சிறப்பு ரயில்கள் இயக்கம்

இதன் காரணமாக அன்று காலை 6.30, 8.20, 11 மணிக்கு சென்டிரல் - அரக்கோணத்துக்கும், காலை 7, 7.25, 9.10 மணிக்கு சென்டிரல்- திருத்தணிக்கும், காலை 10.45 மணிக்கு சென்டிரல்- ஆவடிக்கும், காலை 9.50 மணிக்கு சென்டிரல்- திருப்பதிக்கும், காலை 8.15, 8.55, 10 மணிக்கு அரக்கோணம்- சென்டிரலுக்கும், காலை 7 மணிக்கு திருவள்ளூர்- சென்டிரலுக்கும், காலை 10.15 மணிக்கு திருத்தணி- சென்டிரலுக்கும், காலை 6.20, 7.35, 8 மணிக்கு அரக்கோணம்- கடற்கரைக்கும், காலை 8.50 மணிக்கு திருத்தணி- கடற்கரைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிகின்றன

இதேபோல் காலை 11.15, மதியம் 12.55, 1.40, மாலை 3.45 மணிக்கு திருவள்ளூர்-திருத்தணிக்கும், மதியம் 12, 2.15 மாலை 3 மணிக்கு திருவள்ளூர்-அரக்கோணத்துக்கும், காலை 10.30, 11.15 மதியம் 12, 1.30, 2.15 மணிக்கு அரக்கோணம்-திருவள்ளூருக்கும், மதியம் 12.35 மணிக்கு திருத்தணி-திருவள்ளூருக்கும் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+